இதுக்கு பிச்சை எடுக்கலாம் – உதவி செய்த நயன்தாராவை வெளுத்து வாங்கிய பயில்வான் ரங்கநாதன்

0
171
- Advertisement -

நயன்தாராவை மோசமாக விமர்சித்து பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மலையாளத்தில் ஒரு லோக்கல் சேனலில் தொகுப்பாளனியாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய நயன் இன்று இந்திய சினிமாவில் ஒரு டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழில் ஐயா என்ற படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கிறார் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். சமீபத்தில் நயன் நடித்த படம் ஜவான். இந்த படத்தை அட்லீ இயக்கி இருந்தார்.

- Advertisement -

நயன் நடித்த படங்கள்:

இந்த படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை அடுத்து நயன்தாராவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அன்னபூரணி. இந்த படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் நயன்தாராவுடன் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

பயில்வான் பேட்டி வீடியோ:

இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார்கள் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் நயன் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில்,இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அதற்கு பிறகு அவருடைய வளர்ச்சி இமயமலை அளவிற்கு உயர்ந்தது. படங்களின் மூலம் அவர் நன்றாக காசை சம்பாதித்தார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கவும் ஆரம்பித்தார்.

-விளம்பரம்-

நயன் குறித்து சொன்னது:

ஒரு கட்டத்தில் இவர் தோல்விகளையும் சந்தித்தார். அதில் இவர் சிம்புவை காதலித்து கல்யாணம் வரை சென்று தோல்வி அடைந்தது. அதற்கு பிறகு பிரபுதேவாவை காதலித்தார். அதுவும் தோற்றது. இதை நயன்தாரா பயன்படுத்தி சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை காப்பாற்றிக் கொண்டார். மேலும், சமீபத்தில் மிக்சாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நயன்தாரா உணவு, உள்ளிட்ட பொருள்களிடம் வழங்கி இருப்பதாக புகைப்படம் வெளியாகியிருந்தது.

நயன்தாரா செய்தது:

இதை அவர் விளம்பரத்துக்காகவே செய்திருந்தார். அதேபோல் உதவி பெற்றவர்களும் இந்த மாதிரியான பொருட்களை நாங்கள் வாங்கி இருக்கிறோம் என்று எல்லாம் பேசி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள். இதற்கு நயன்தாரா பிச்சை எடுக்க சொல்லி இருக்கலாம். இப்படி பண்ணுவது சரியா? அதனால்தான் உனக்கு ஆண்டவன் பிள்ளையை கூட கொடுக்கவில்லை.நயன் பண வெறி பிடித்தவர். சிம்புவை காதலித்து அவரிடம் இருந்து பணத்தை பிடுங்கி விட்டார். அதற்குப்பின் பிரபுதேவாவை காதலித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் அவருடைய மனைவியிடம் அடி வாங்கியதெல்லாம் மறந்து போய்விட்டதா? விக்னேஷ் சிவன், நயன்தாரா எது சொன்னாலும் தலையை ஆட்டும் நபர். நயன்தாரா வந்த நேரம்தான் அஜித் படம் அவர் கையை விட்டு போனது என்று மோசமாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

Advertisement