ஒரே திரையில் இரண்டு கதைகள், புதிய முயற்சி ஈர்த்ததா ? – பிகினிங் விமர்சனம் இதோ.

0
951
begining
- Advertisement -

உலக சினிமா அளவில் “ஸ்ப்ளிட் ஸ்க்ரீன்” பெரிய அளவில் பல இடங்களில் வெளியாகி இருந்தாலும் இந்தியாவில் அதுவும் ஆசியாவிலேயே முதன் முறையாக “ஸ்ப்ளிட் ஸ்க்ரீன்” தொல்நூட்பத்தை பயன்படுத்தி எடுக்கபப்ட்ட ஒரு படம் என்றால் அது இந்த “பிகினிங்” திரைப்படம்தான். இந்த படத்தை இயக்குனர் ஜெகன் விஜயா இயக்க, லெப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது. மேலும் இப்படத்தில் வினோத் கிஷன் மற்றும் கௌரி ஹாய் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் நேற்று வெளியான நிலையில் புதுமையான முதல் முயற்சியில் எடுக்கப்பட்டு இருந்த இப்படம் எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கதைக்களம் :

படத்தின் இடது புறத்தில் மனவளர்ச்சி குன்றிய ஒரு நபர் (வினோத் கிஷன்) இருக்கிறார். அவர் தாய் ரோகினி இவருக்கு தேவையான விஷியங்களை செய்து விட்டு ஒரு வீட்டிற்குள் பூட்டி வைத்து வேலைக்கு செல்கிறார். வினோத் கிஷன் டிவியில் வரும் கார்ட்டூன் படங்களை பார்த்து தனியாக வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்க வலது புரம் ஜி.கிஷனை மயக்க மருந்து கொடுத்து சில நபர்களின் உதவியுடன் கடத்தி ஒரு அறையில் பூட்டி வைக்கிறார் சச்சின். இப்படியிருக்க அவருக்கு ஒரு பழைய போன் கிடைக்கிறது. இந்நிலையில் இந்த போனை வைத்து அவர் தப்பித்தாரா? சச்சின் யார்? எப்படி மனநலம் குன்றிய ஒரு நபரின் கதையும் ஜி.கிஷனின் கதையும் ஒன்றாக இணைகிறது என்பதுதான் மீதி கதை.

- Advertisement -

படத்தை பொறுத்தவரை ஒரு புதுமையான முயற்சி என்றே சொல்லலாம். இடதுபுறம் மனநலம் குன்றிய நபராக வரும் வினோத் கிஷன் தன்னுடைய சிறப்பான நடிப்பின்னால் ரசிகர்களை கவருகிறார். சொல்லபோன்னால் முதல் பகுதி முழுவதுமே இவரே திரையை ஆக்கிரமித்து கொண்டு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு வார்த்யை உச்சரிக்கும் போதும் சரி, குழந்தை தனமான உடல் மொழியிலும் சரி மிகச்சிறப்பான நடிப்பையே தந்திருக்கிறார். இருந்தாலும் இந்த அதிகப்படியான நடப்பு இரண்டாம் பாகத்தில் ஒரே மாதிரியாக இருப்பதினால் சலிப்பை தருகிறது.

இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் ஜி.கிஷனின் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக சச்சின் தன்னுடைய நடிப்பானால் கதை போக போக சிறந்த வில்லனாக மாறுகிறார். ஆனால் தொடக்கத்தில் இருவர் செய்த அலப்பறைகள் இறுதியில் ஒன்றுமில்லாமல் போய் விடுகிறது. திரையில் இரண்டு கதைகள் ஒரே நேரத்தில் செல்வதினால் ஒரு கதையை மட்டுமே கவனிப்பது முடியாத காரியமாக இருக்கிறது. சில இடங்களில் ஒரு பக்க திரை பிரமாதமாக செல்ல ஒரு பக்கம் மாட்டும் ஒன்றும்மில்லாமல் இருக்கிறது.

-விளம்பரம்-

மற்ற படங்களை போல பாடல் போடுகிறறோம் என்று கடுப்படிக்காமல் கதை செல்வது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் மனநலம் குன்றிய நபர்களில் இயலாமையை சிரிப்புக்குள்ளாக்கியது இயக்குனருக்கே வெளிச்சம். வில்லன் கதாபாத்திரம் பல நேரங்களில் தேவையற்ற செயலை செய்கிறது. இது போன்ற ஒரு புதுமையான படத்திற்கு ஒளிப்பதிவு மிகவும் முக்கியம் அதனை சரியாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வீரகுமார். இப்படத்தில் அம்மாவாக நடித்த சிங்கிள் பேரெண்ட் ரோகிணி கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். மனவளர்ச்சி குன்றிய நபராக வரும் வினோத் கிஷன் அந்த கதாபத்திரத்தில் இருந்து வெளியில் வருவதற்க்கே சில காலம் தேவைப்படும் அந்த அளவிற்கு மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறை :

ஒளிப்பதிவு இன்னனும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சில இடங்களில் ஒரு பக்க ஸ்க்ரீன் சும்மா இருக்கிறது.

கதை நற்றாயாக இருந்தாலும் மனம் குன்றிய நபரை வைத்து காமெடி செய்வது சரியாக தெரியவில்லை.

கதையா சாதாரணமாகவே எடுத்திருக்கலாம்.

வில்லன் கதாபத்தித்தின் வில்லத்தனம் சரியாக இல்லை.

நிறை :

வினோத் கிஷன் நடிப்பு பிரமாதம்.

புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்

பின்னணி இசையில் கே.எஸ்.சுந்திரமூர்த்தியின் இசை பிரமாதம்.

கதைக்களம் பரவாயில்லை.

மொத்தத்தில் புதுமையான முயற்சி செய்திருந்தாலும் த்ரில்லர் கலந்த சிரிப்பாக படமாக மட்டுமே அமைத்திருக்கிறது.

Advertisement