மோடி குறித்த பாக்கியராஜின் கருத்து, சாந்தனுவை நைனாக்கள் எதிரான சங்கத்தில் சேர்த்த நெட்டிசன்கள். காரணம் அவரின் இந்த பதிவுகள் தான்.

0
212
Shanthanu
- Advertisement -

சமீபத்தில் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று பாக்கியராஜ் கூறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.இப்படி ஒரு நிலையில் பாக்கியராஜ் மகன் சாந்தனுவின் பழைய ட்விட்டர் பதிவுகளை முன்னிறுத்தி பலரும் கேலி செய்து வருகின்றனர். பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் மற்றும் புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குநர் கே பாக்யராஜ் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

நூல் வெளியீட்டு விழாவில் பாக்யராஜ்:

மேலும், இந்த நூலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட பாக்கியராஜ் பெற்றுக்கொண்டார். பின் இந்த நிகழ்ச்சியில் பாக்கியராஜ் கூறியிருப்பது, அண்ணாமலை இங்கிருந்து கர்நாடகா சென்று சிறப்பாக பணியாற்றினார். நான் கர்நாடகத்தில் இருந்தபோது அவரைப் பற்றி பெருமையாகப் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். பாஜகவுக்கு சரியான தலைவரைத் தேர்வு செய்துள்ளார்கள். பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை தான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். பிரதமர் வெளிநாடு செல்வதை ஒரு சிலர் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

பிரதமர் மோடி குறித்து பாக்யராஜ் கூறியது:

ஆனால், அவர் ஓய்வில்லாமல் எப்படி சென்றார்? அவர் உடலை எப்படி கவனித்துக் கொள்கிறார்? என்று நான் ஆச்சரியமாக பார்த்தேன். இந்தியாவுக்கு இப்படி ஒரு துணிச்சலான பிரதமர் தேவை. பிரதமர் மோடியை விமர்சித்து வருபவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நல்லவர்கள் அவரைப் பற்றி தவறாக பேச மாட்டார்கள். பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடியை புகழ்ந்து பாக்கியராஜ் பேசியுள்ளார். இப்படி இவர் பேசியிருக்கும் பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஷாந்தனுவின் பழைய பதிவுகள் :

பாக்கியராஜின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அவரின் மகனான சாந்தனு மோடி குறித்து பதிவிட்ட கருத்துக்களை தோண்டி எடுத்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதிலும் குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்த நபர்கள் குறித்து மோடியிடம் சாந்தனு கேட்ட கேள்வி குறித்தும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது இந்தி தெரியாது போடா என்று அவர் அணிந்த டி – ஷர்ட் குறித்த பதிவுகளை எல்லாம் தற்போது பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

தந்தைக்கு எதிராக விஜய், யுவன் :

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு பிரபலங்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் தனது தந்தையான எஸ் ஏ சியுடன் சண்டையிட்டு பேசாமல் இருந்து வருகிறார். அதே போல சமீபத்தில் இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசி இருந்தது பெரும் சர்ச்சையானது. ஆனால், அடுத்த சில நாளிலேயே அவரின் மகனான யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் கருப்புநிற உடை அணிந்து நான் கருப்பு திராவிடன், தமிழன் என்பதில் பெருமை கொள்பவன் என்று பதிவிட்டு இருந்தார்.

நைநாக்கள் எதிர்ப்பு சங்கமா :

யுவனின் இந்த பதிவால் இளையராஜாவின் கருத்திற்கு எதிராக தான் இப்படி பதிவிட்டு இருந்தார் என்று பலர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தற்போது இந்த அப்பா மகன் சர்ச்சையில் சமீபத்தில் சிக்கி இருக்கும் சாந்தனுவை விஜய் – யுவன் லிஸ்டில் சேர்த்து இருக்கும் நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர். அதிலும் அப்பாக்களை எதிர்போர் சங்கம் என்று குறிப்பிட்டு விஜய் – யுவன் – ஷாந்தனு ஆகியோரின் புகைப்படங்களை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Advertisement