சொரணை இருக்கறவங்க பயப்படனும், சரியான போர்ஜரி என்று ஆர் கே செல்வமணியை விளாசிய பாக்யராஜ்- இது தான் காரணம்

0
493
- Advertisement -

தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் சங்கம் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் ஆர்கே செல்வமணி அணி மற்றும் பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆர்கே செல்வமணி தான் தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். வரும் 27ஆம் தேதி இந்த சங்கத் தேர்தல் மீண்டும் நடக்க உள்ளது. இதில் செல்வமணி தலைமையிலான அணியை பாக்கியராஜ் தலைமையிலான அணி எதிர்த்து போட்டியிடுகிறது. மேலும், இந்த அணியில் பார்த்திபன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் மற்ற பொறுப்புகளுக்கு போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் பாக்கியராஜ் அணியினரின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட பாக்கியராஜ் செல்வமணி குறித்தும், சர்க்கார் படம் குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

இதுவரை தலைவராக இருந்த ஆர்கே செல்வமணி நல்லா சம்பாதித்து ஆண்டு அனுபவித்து விட்டார். நீ எடுத்த படம் எல்லாம் நல்லா ஓடியது என்று சொன்னார்கள். ஆனால், அந்த படம் எல்லாம் நீதான் எடுத்தியா? என்ற சந்தேகம் இப்போது எனக்கு வந்துவிட்டது. ஏன்னா, நான் நடித்த தூறல் நின்னு போச்சு படத்தில் சிவராமனுக்கு முகத்தில் ஆயில் போட்டு விடுவேன். எனக்கு அவர் துணையாக வருவார். இதை காமெடிக்காக படத்தில் பண்ணோம். இதைப் பார்த்து பாக்கியராஜ் குணமே இப்படித்தான். அடுத்தவர்களுக்கு கரி பூசுவது தான் பாக்கியராஜ் குணம் என்று ஆர்கே செல்வமணி சொல்கிறார். என்னய்யா இதெல்லாம், இப்ப செல்வமணி படத்தில் ரேப் சீன் காட்சி வந்தால் அப்ப செல்வமணி ரேப் பண்ணிட்டாரு என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?

- Advertisement -

பாக்யராஜ் அளித்த பேட்டி

எதை உதாரணம் சொல்வது விவஸ்தை இல்லை. நீ என்ன இயக்குனர்? என்ன படம் எடுத்த, எப்படி எடுத்த என்பது தெரியவில்லை. நீ எடுத்த படம் நல்லா இருக்கிறது என நினைத்தால் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இப்போ நீ என்ன முயற்சிகள் பண்ணிக்கொண்டு இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். அதாவது தண்ணியில் அடித்துக் கொண்டு போகும் போது எதையாவது பிடித்துக் கொள்ளலாம் என்று தோன்றும். புல், இலை எல்லாம் பிடிக்க தோன்றும். அது காப்பாற்றாது என்று தெரிந்தாலும் பயத்தில் பிடிக்க தோன்றும். செல்வமணி நிலைமையும் இதுதான்.

செல்வமணி பற்றி பாக்யராஜ் சொன்னது:

நான் தேர்தலில் நிற்கப் போகிறேன் என்ற உடனே எல்லோருமே வந்து செல்வமணியை எதிர்ப்பது ரொம்ப கஷ்டம். இத்தனை நாள் நீங்கள் சினிமாவில் சம்பாதித்த மொத்த பெயரும் வீணாகி விடும் என்றெல்லாம் சொன்னார்கள். துறைமுகத்தில் நின்றிருந்தால் கப்பல் பாதுகாப்பாகவே இருக்கும். அதற்காகவா கப்பல் கட்டினார்கள். அதை கடல் உள்ளே சூறாவளி புயல் எல்லாம் கடந்தால் தான் சாதிக்க முடியும். அதேபோல வெட்கம், சூடு, சொரணை ஏதாவது இருந்து இருந்தால் அவர்கள் மாற்றிக் கொள்வார்கள் என்று பயப்படுவார்கள். எதுவுமே இல்லாதவர்கள் எதற்கு பயப்படனும்.

-விளம்பரம்-

சர்க்கார் படம் பிரச்சனை:

சர்க்கார் பத்தி சொல்லனும் என்றால், இப்படத்தின் கதையை சொன்னார்கள். ஆனால், இரண்டு பேர் சொன்ன கதையும் ஒன்னு. அவர் கதையை முன்னாடியே பதிவு பண்ணி விட்டார்கள். என்னுடைய முடிவை மட்டும் சொல்ல முடியாது. இது 12 பேரை வைத்து அவர்களையும் சேர்த்துத்தான் முடிவெடுக்க முடியும் என்று சொன்னேன். நான் கதையில் எழுதி கெட்டிக்காரத்தனம் இருந்தால் சங்கம் என்று வந்தால் எல்லோரையும் சேர்த்து தான் முடிவு எடுக்க வேண்டும். அப்போது செல்வமணி என்னிடம் அந்த கதை வேறு, இந்த கதை வேறு என்று சொன்னார். நான் உடனே பேப்பரை தூக்கி போட்டு விட்டேன்.

மாற்றி பேசிய முருகதாஸ்:

ஏன் என்றால், நான் முருகதாஸ்ஸை வீட்டிற்கு கூப்பிட்டு கதையை பற்றி பேசி வைத்து இரண்டு கதையும் வெளியே போனால் ரொம்ப அசிங்கமாகிவிடும். ஏதோ ஒரு விதத்தில் வந்து விட்டது. அமைதியாக முடித்து விடலாம் என்று சொன்னேன். எல்லாம் பேசி முடித்த பிறகு செல்வமணி இது வேறு அது வேறு என்று சொன்னார். சரி அவருக்கு தோன்றியதை சொன்னார் என்று நான் அமைதியானேன். அடுத்த நாள் அவருக்கு சில ஆட்கள் இருப்பார்கள். அவருடைய ஆட்கள் எல்லாம் விவாதம் செய்தார்கள். என் பக்கம் மெஜாரிட்டி இருப்பதனால் கடிதம் எழுதி போட்டோன். ஆனால், செல்வமணி கோஷ்டி முருகதாசிடம் என்ன பேசினார்கள்? என்று தெரியவில்லை. அதுவரையும் தெளிவாக இருந்த முருகதாஸ் திடீரென்று இந்த கதை வேறு அந்த கதை வேறு. பாக்யராஜ் மைனாரிட்டி வைத்து கடிதம் போட்டிருக்கிறார்கள் என்று சொன்னார்.

சர்க்கார் படம் பற்றி பாக்யராஜ் இடம் இருந்த ஆதாரம்:

உடனே பத்திரிகையாளர்கள் எல்லோரும் வந்து என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று சொன்னேன். முருகதாஸ் பயந்து போய் ஆர்கே செல்வமணி இடம் போன் பண்ணி, அவரு ஆதாரம் இருக்கிறது என்று சொல்கிறார். என்ன பண்ணுவது என்று கேட்டிருக்கிறார். ஆர்கே செல்வமணி நான் அந்த நோட்புக்கில் மாத்தி எழுதி விட்டேன். அதனால் பிரச்சனை இல்லை நமக்கு தான் சாதமாக அமையும் என்று சொன்னார். இதற்கு ஆதாரமான அந்த டேப்பை எல்லோரும் தேடுகிறார்கள். அப்போது அங்கிருந்தவர் இதை அன்றே பாக்யராஜ் எடுத்துச் சென்றுவிட்டார் என்று கூறினார். அப்போது செல்வமணிக்கு அள்ளு விட்டது. தெளிவாக இருந்த முருகதாஸும் குழப்பி அவரை மாற்றி பேச வைத்து தேவை இல்லாமல் போர்ஜரி வேலை செய்தவர் ஆர்கே செல்வமணி என்று பாக்யராஜ் பேசியிருக்கிறார். வழக்கமாகவே சக கலைஞர்களை அதிகமாக விமர்சிக்காத பாக்யராஜ் தேர்தல் என்ற ஒன்று வந்தவுடன் ஆர்கே செல்வமணி குறித்து பேசி இருப்பது சினிமா உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement