கேரள மக்கள் அப்படி நெனச்சிட கூடாது – மஞ்சுமேல் பாய்ஸ் விவகாரம், ஜெயமோகனுக்கு மேடையில் பாக்கியராஜ் பதிலடி

0
331
- Advertisement -

மஞ்சுமேல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய கருத்துக்கு இயக்குனர் பாக்கியராஜ் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் மஞ்சுமேல் பாய்ஸ் படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது. அதோடு மலையாளத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இந்த படம் பெற்று இருக்கிறது. சொல்லப்போனால், இந்த படம் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

எழுத்தாளர் ஜெயமோகன் கருத்து:

இப்படி ஒரு நிலையில் மஞ்சுமேல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய கருத்து சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதாவது, எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சுமேல் பாய்ஸ் படம் எனக்கு எரிச்சலை ஊட்டுகிறது. அதில் காட்டுவது புனைவு கிடையாது. தென்னகத்தில் சுற்றுலா வரும் கேரள பொறுக்கிகளிடம் அதே மனநிலை தான் உள்ளது. குடி குடி குடி என்று விழுந்து கிடப்பது, அத்துமீறுவது தவிர வேறு எதிலும் ஆர்வமில்லை.

பிரபலங்கள் கண்டனம்:

எந்த பொது நாகரிகமும் கிடையாது. இந்த மலையாள பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது. ஆனால், அவர்கள் தங்கள் மொழி மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று தெனாவெட்டு இருக்கும். இவர்கள் குடித்து வீசிய பாட்டில்களால் யானைகள் கால் அழுகி இருக்கின்றது. இப்படத்தினை கொண்டாடுபவர்கள் அரைவேக்காடுகள் என்றெல்லாம் படத்தையும், மலையாள மொழி மக்களையும் விமர்சித்தும் பேசியிருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

பாக்யராஜ் பதிவு:

இந்நிலையில் இது குறித்து இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவில் வசூலித்தைவிட தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் வசூல் செய்து இருக்கிறது. வெளி மாநிலங்களில் வேறு மொழிகளில் எடுத்த பல திரைப்படங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், நம்ம ஊர் எழுத்தாளர் ஒருவர் ரொம்ப கீழே இறங்கி அதை விமர்சனம் செய்திருப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் மிகப்பெரிய எழுத்தாளர். நல்ல பெயரை பெற்றவர். அவர் படத்தை மட்டும் விமர்சனம் செய்திருந்தால் பரவாயில்லை, கேரள மக்களை மோசமாக பேசி இருந்தார்.

எழுத்தாளர் குறித்து சொன்னது:

இது தமிழரின் நாகரிகமும், பண்பாடும் கிடையாது. நாம் எல்லோரையும் பாராட்டி தான் சொல்லி இருக்கிறோம். ஒரு எழுத்தாளர் இப்படி விமர்சனம் செய்தது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. சினிமாவை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், மக்களை அப்படி சொல்ல கூடாது. யாரும் அவர் பேசியதை தமிழ்நாட்டில் கண்டிக்கவில்லையா? என்று கேரள மக்கள் நினைக்கக் கூடாது. அதற்காக தான் நான் இந்த பதிவை போட்டு இருக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், பாக்கியராஜ் தன் பதிவில் அந்த எழுத்தாளர் யார்? என்பதை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement