கிங்ஸ்லி – சங்கீதா திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கும் விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.அந்த வகையில் தற்போது கிங்ஸ்லி – சங்கீதா திருமணம் குறித்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
சமீபத்தில் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மாஸ்டர் பட நடிகையை திடீர் திருமணம் முடித்து இருந்தார். சங்கீதா வேறு யாரும் இல்லை, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் தான். கடந்த சில வருடங்களாக கிங்ஸ்லீ மற்றும் சங்கீதா காதலித்து வந்ததாகவும் சமீபத்தில் மைசூரில் கிங்ஸ்லி ஒரு படப்பிடிப்பில் இருந்த போது இவர்கள் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன் நடந்ததாக கூறப்பட்டது.
இப்படி ஒரு நிலையில் கிங்ஸ்லி திருமணம் குறித்து பேசி இருக்கும் பயில்வான் ‘கிங்ஸ்லிக்கு 46 வயது ஆவதாகவும் அவர் மல்டி மில்லினர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதா அவருக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. திருமண விஷயத்தை கேட்டதும் கிங்ஸ்லிக்கு போன் பண்ணி ‘ஏன் திடீர் திருமணம்னு கேட்டதற்கு நான் மைசூரில் இருந்த போது திடீர் என்று அந்த பொண்ணு ஷூட்டிங்க்கு வந்து திருமணம் செய்துகொள்ள கேட்டார், நானும் எவ்ளோ நான் தள்ளி போடுவது என்று தாலி கட்டிடேன்னு சொன்னார்’ என்று பயில்வான் கூறியுள்ளார்.
ஏற்கனவே கிங்ஸ்லி – சங்கீதா திருமணம் குறித்து கூறிய நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான சதீஸ் ”நானும் கிங்ஸ்லியுமே நீண்ட கால நண்பர்கள். அவரது டான்ஸ் மாஸ்டர்கள்தான் எனக்கும் மாஸ்டர்கள் என்பதால், அவருடனான நட்பு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. மேலும், திருமண விஷயத்தில் அவர் நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தார்.சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் இல்லையென்றால் டைரக்டாக அறுபதாம் கல்யாணம் தான் செய்ய வேண்டியதாக இருக்கும் என்று நாங்களே அவரை பலமுறை கலாய்த்து இருக்கிறோம்.
பின்னர் ஒரு கட்டத்தில் அவரே மனம் மாறி சங்கீதா மீது காதலில் விழுந்துவிட்டார். இது பல வருட காதல் இன்று தான் அவர்களின் திருமணம் மைசூரில் நடைபெற்றது. நானும் அந்த திருமணத்திற்கு சென்றிருக்க வேண்டியது.ஆனால் படப்பிடிப்பின் போது எனக்கு காலில் ஏற்பட்ட ஒரு சிறிய காயத்தினால் அந்த திருமணத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை’ என்றும் கூறியுள்ளார். இவர்கள் இருவரின் திருமணம் மைசூரில் நடைபெற்று இருக்கிறது. அங்கே ஒரு படப்பிப்பில் தான் கிங்ஸ்லி இருந்து இருக்கிறார்.
இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சில படக் குழுவினர் மற்றும் கலந்து கொண்டு இருக்கிறார்கள் விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதில் பல்வேறு சினிமா பரவாலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கிங்ஸ்லி – சங்கீதா திருமணம் குறித்து பயில்வான் கூறி இருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.