திருமணமான இரண்டே வருடத்தில் இப்படி ஒரு நோயால் இறந்த முதல் மனைவி – இன்று வரை அவர் கொடுத்த முதல் பரிசை பத்திரமாக வைத்திருக்கும் பாக்கியராஜ்.

0
7376
Bhagyaraj
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் சிறந்த திரை கதை இருக்கும் படங்களை எடுப்பது தான் பாக்கியராஜின் தனி சிறப்பு.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-28.jpg

தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் நடிகராகவும் கொடிகட்டி பறந்தார். இறுதியாக தன் மகனை வைத்து ‘சித்து +2’ படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் படங்களை இயக்குவது இல்லை என்றாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். பாக்கியராஜ் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பதும் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

இதையும் பாருங்க : இவருக்கு இதே வேலை தான் – பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

- Advertisement -

இரண்டாம் மனைவி பூர்ணிமா :

தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் நடிகராகவும் கொடிகட்டி பறந்தார். இறுதியாக தன் மகனை வைத்து ‘சித்து +2’ படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் படங்களை இயக்குவது இல்லை என்றாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். பாக்கியராஜ் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பதும் அனைவரும் அறிந்த விஷயம் தான்.

Watch Manmatha Leelai | Prime Video

பிரவீனாவுடன் ஏற்பட்ட காதல் :

பாக்கியராஜ் படம் இயக்குவதற்கு முன்பாக கஷ்டப்பட்டு கொண்டிருந்தபோது அவரை ஊருக்கு போகச்சொல்லி அறிவுறுத்தி அவர் பிரவீனா இதனால் சென்னையை விட்டு கிளம்பிய பாக்கியராஜ் விரைவில் ஒரு மிகப்பெரிய படம் மூலம் நான் திரும்ப வருவேன் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு நிலையில் பாக்கியராஜ் அல்சர் ஏற்பட சிகிச்சைக்காக சென்னை வந்த போது தான் இவருக்கு 16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

மஞ்சள் காமாலையால் இறந்த மனைவி :

அந்த சமயத்தில்தான் மீண்டும் பிரவீனாவை சந்தித்து 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பாக்கியராஜ். இருப்பினும் திருமணமான இரண்டே வருடத்தில் நடிகை பிரவீணாவிற்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு 25 வயதில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த ஒரே வருடத்தில் பாக்கியராஜ் பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போதும் தன்னுடைய முதல் மனைவியை மறவாத பாக்கியராஜ், பிரவீனா பரிசாக அளித்த மோதிரத்தை தற்போதும் அணிந்து கொண்டிருக்கிறார்.

அலுவலகத்தில் ப்ரவீனாவின் புகைப்படம் :

அதேபோல பிரவீணாவின் புகைப்படம் பாக்கியராஜின் அலுவலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பாக்கியராஜ் இறுதியாக 2010 ஆம் ஆண்டு தன் மகனை வைத்து சித்து +2 படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் படம் இயக்குவதையே நிறுத்திய பாக்கியராஜ் படங்களில் நடித்து மட்டும் வருகிறார். இறுதியாக இவரது மகன் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement