கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலமடைந்ததோ, அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்ற போட்டியாளர்களுக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. அதனால், இந்த சீசனில் போட்டியாளராக பங்கு பெற பல பிரபலங்களும் விரும்பி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக சென்ற ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் பங்குபெற்ற போட்டியாளர்கள், இந்த ஆண்டு நடைபெற உள்ள நிகழ்ச்சியிலும் பங்குபெற ஆர்வம் காட்டி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் கூட பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த நடிகை அனுயா, தனக்கு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற ஆசையாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை அனுயாவிற்கு அடுத்து பிக் பாஸ் முதல் சீசனில் பங்குபெற்ற நடிகர் பரணியும், தற்போது பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்’பிக் பாஸ் சீசன் 2 விலிருந்து எனக்கு இதுவரை எந்த வித அழைப்பும் வரவில்லை, ஒருவேளை அழைத்தால் போவேன் ‘ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பக்கத்தில் போட்டியாளராக இருந்த பரணி, ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்து வந்தார். சக போட்டியாளரிடம் அதிக வெறுப்பை சம்பாதித்த நடிகர் பரணி, பிக் பாஸ் வீட்டிலிருந்து தாமாக முன்வந்து வெளியேறினார் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் தான்.
English Overview:
Actor Bharani who participated in Bigg Boss Tamil Season 1 likes to participate in season 2 also. lets wait and watch the show. Check Bigg Boss vote Tamil link to get fresh update about Bigg Boss Tamil season two.