தெலுங்கு மற்றும் மலையாளத்தின் பாரதி கண்ணம்மா நடிகர்களை பார்த்துள்ளீர்களா ?

0
4985
bharathi

தற்போது இருக்கும் கால கட்டங்களில் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் படங்களை ரசிப்பதை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிக்கும் மக்கள் தான் அதிகமாக உள்ளனர். அந்த வகையில் தற்போது போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு சேனல்களிலும் தொடர்களை அதிகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் சேனல் நிறுவனம். இதனைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுமே தூள் கிளப்புகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி ஒளிபரப்பாக துவங்கிய “பாரதி கண்ணம்மா” சீரியல் மாபெரும் ஹிட் அடைந்துள்ளது.

This image has an empty alt attribute; its file name is 2-26.jpg

ஆரம்பத்தில் கொஞ்சம் சுமாராக சென்று கொண்டு இருந்த இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது. அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர். இதை தொடர்ந்து இந்த சீரியலின் Trp எகிறியது. பொதுவாக ஒரு சீரியல் ஹிட்டானால் அதனை மற்ற மொழிகளிலும் ரீ – மேக் செய்வது வழக்கமான ஒரு விஷயம் தான்.

இதையும் பாருங்க : அட , இந்த ரோஜா சீரியல் நடிகரின் மகள் தான் விஷ்ணு விஷால் விவாகரத்து செஞ்ச முதல் மனைவி.

- Advertisement -

அந்த வகையில் இந்த பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தெலுங்கில் (கார்த்திகை தீபம்) என்றும்,கன்னடத்தில்(முத்து லட்சுமி) என்றும் ஓளிபரப்பாகிறது. மேலும்,இந்த இந்த பாரதி கண்ணம்மா சீரியல் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழில் வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் பாரதி என்ற கதாபத்திரத்தில் அருண் பிரசாத் நடிக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is 1-43.jpg

கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் புது முக நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் நடிக்கிறார். மேலும், தெலுங்கில் ஒளிபரப்பாகும் இந்த கார்த்திகை சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் பிரிமி விஸ்வானந்த்தும்,பாரதி கதாபாத்திரத்தில் நிருபம் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும்,இந்த சீரியலில் இருந்து ஒரு மனிதர் தன் வாழ்க்கை துணையாக தேர்ந்து எடுப்பது அழகையா?குணத்தையா? என்பதை இயக்குனர் அழகாக காட்டி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement