பிரபல நடிகை சந்தோஷின் இரட்டை குழந்தைகளை பார்த்துள்ளீர்களா. இப்போ இன்னொரு விசேஷமும் இருக்கு.

0
129299
santhoshi
- Advertisement -

சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு சென்று மீண்டும் சின்னத் திரையிலேயே பயணம் செய்த நடிகைகளில் சந்தோஷியும் ஒருவர் . மேலும்,நாடக நடிகை பூர்ணிமாவின் மகள் தான் நடிகை சந்தோஷி. மேலும்,நடிகை சந்தோஷி தன்னுடைய எட்டு வயது இருக்கும் போதே தன்னுடைய அம்மாவுடன் இணைந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த ‘பாபா’ படத்தில் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்து மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். மேலும்,இவர் பாபா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
Image result for actress santhoshi son"

- Advertisement -

இப்படத்தை தொடர்ந்து நடிகை சந்தோஷி பாலா, மாறன், ஆசை ஆசையாய், அன்பே அன்பே, உன்னை சரணடைந்தேன், யுகா, நினைத்தாலே, வீராப்பு, மரியாதை, பொற்காலம் என பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார். மேலும்,இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் என இரு மொழி படங்களில் கூட நடித்து உள்ளார். இவ்வளவு படம் நடித்தும் இவர் வெள்ளித்திரையில் அதிக அளவு பிரபலமாகவில்லை. இதனைத்தொடர்ந்து நடிகை சந்தோஷிக்கு 2000 ஆம் ஆண்டில் சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் சின்னத் திரை நோக்கி பயணம் செய்தார். பின் சின்னத்திரையில் இவர் சன் டிவியில் ஓளிபரப்பான வாழ்க்கை என்ற சீரியலின் மூலம் நடிக்க துவங்கினார். அதற்கு பிறகு ருத்ர வீணை, அம்மு, அரசி, இளவரசி, சூரிய புதிரி, வாடகை வீடு, இல்லத்தரசி, மரகத வீணை, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், பாவ மன்னிப்பு, பொண்டாட்டி தேவை, நம்பர் 23 ,மகாலட்சுமி என பல தொடர்களில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : அஜித், கார் ஒட்டி பாத்திருப்பீங்க பைக் ஒட்டி பாத்திருப்பீங்க. கிரிக்கெட் விளையாடி பாத்திருக்கீங்களா.

மேலும், நடிகை சந்தோஷி சினிமாவில் பிரபலமானதை விட சீரியலில் தான் இவர் அதிக அளவு மக்களிடையே பேசப்பட்டார். இந்நிலையில் இவர் தன்னுடன் நடிக்கும் நாடக நடிகர் ஸ்ரீகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். அதுமட்டும் இல்லாமல் நடிகை சந்தோஷி அவர்கள் நிறைய பியூட்டி(அழகு) போட்டிகள் கூட செய்கிறார்கள். மேலும், இவர் பல நடிகைகளுக்கு மேக்கப் போட்டு அழகு செய்வதை தன் முழு நேர வேலையாக தற்போது வைத்து உள்ளார். மேலும்,இவர் சமீப காலமாகவே சீரியலில் காண முடியவில்லை. பின் இவர் இந்நிலையில் நடிகை சந்தோஷி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் போது அவருடன் சீரியலில் நடித்த தோழிகள் அவருக்கு வளைகாப்பு நடத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளது. அதுவும் அழகான பெண் குழந்தைகளை பெற்று எடுத்து உள்ளார். இதனைத் தொடர்ந்து சிசேரியன் மூலம் தான் குழந்தைகள் பிறந்து உள்ளது என்ற தகவலும் வெளிவந்தது. இந்த நிலையில் நடிகை சந்தோஷி தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது .

Advertisement