விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த ஜாக்லின் கதாநாயகியாக நடித்து வரும் தேன்மொழி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் வெற்றிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏற்கனவே நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், தேன்மொழி தொடரில் அரவிந்த் என்ற vao கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெற்றிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். கொரோனா பிரச்சனை காரணமாக இவரது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.
அதே போல நடிகர் வெற்றியின் திருமண வீடியோ ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் தம்பதிகள் இருவரும் கிருஸ்துவ முறைப்படி திருமணத்தை முடித்தது போல தெரிகிறது. அந்த வீடியோவில் மணப்பெண்ணை புது மாப்பிள்ளையான வெற்றி அனைவர் முன்பும் முத்தமிட்டு திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இதோ அந்த வீடியோ.