வடிவேலுவை இயக்குனர் பாரதிராஜா அவமானப்படுத்தி வெளியே அனுப்பி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவானாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். இவரை ராஜ் கிரண் தான் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். வடிவேலு திரை உலகில் அறிமுகமான புதிதில் கவுண்டமணி, செந்தில் ஆகிய இருவருடன் சேர்ந்துதான் நடித்துக் கொண்டிருந்தார். அவர்களுடன் சேர்ந்து நடித்தாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும், உடல் மொழியாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதற்குப் பிறகு சோலோ காமெடியனாக உருவெடுத்த வடிவேலு, மறைந்த காமெடி நடிகர் விவேக் உடனும் சேர்ந்து சில படங்களில் நடித்தார்.
வடிவேலு குறித்த தகவல்:
ஒரு கட்டத்தில் வடிவேலுவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, அவர் இல்லாமல் படங்களே வராது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக ரஜினிகாந்த் ‘சந்திரமுகி’ படத்திற்காக கமிட் ஆனபோது இயக்குனர் பி. வாசுவிடம் முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கி விடுங்கள் என்று கூறினாராம். அதோடு ஒரு படத்தில் கதையே இல்லாவிட்டாலும் அந்த படத்தில் வடிவேலு நடித்தால் கண்டிப்பாக ஹீட்டாகிவிடும் அல்லது படம் வியாபாரம் ஆகிவிடும் என்கிற நிலை சில வருடங்களுக்கு முன்பு வரை கோலிவுட்டில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார்:
இப்படி இருக்கும் போது தான் வடிவேலுவுக்கும் விஜயகாந்த் இடையே மோதல் உருவானது. வடிவேலு திமுகவின் கட்சியில் சேர்ந்து அரசியல் மேடையில் ஏறி விஜயகாந்தை பற்றி மோசமாக பேசியிருந்தார். ஆனால், அதுவே அவருக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதற்குப்பின் வடிவேலுவை வைத்து படம் எடுக்கவே பலரும் யோசித்தார்கள். ஒரு கட்டத்தில் வடிவேலு சினிமாவில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலுவை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டது.
வடிவேலுவின் கம்பேக் :
அதற்குப்பின் வடிவேலு முதலில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ரி என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்திருந்தார். பின் மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வடிவேலுவுக்கு நல்ல பெயரை ஹிட் கொடுத்தது. தற்போது வடிவேலு மாரீசன், கேங்கர்ஸ் போன்ற படங்களில் கமிட்டாகி பணியாற்றி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் வடிவேலுவை இயக்குனர் பாரதிராஜா அவமானப்படுத்தி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கு சீமையிலேயே படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
வடிவேலு-பாரதிராஜா சண்டை:
அந்த காலத்திலே இந்த படம் மிக பெரிய பட்ஜெட்டில் உருவானது. இதனால் இந்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை உயர்த்த வடிவேலு முடிவெடுத்து இருந்தார். அதோடு இயக்குனர் பாரதிராஜாவிடம் வடிவேலு, எனக்கு இந்த படத்தில் நடிக்க 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார். இதனால் கோபப்பட்ட பாரதிராஜா, நீ நடிக்கவே வேண்டாம். கிளம்புடா என்று சொல்லி விரட்டி விட்டிருக்கிறார். இதனால் மனமுடைந்த வடிவேலு அழுது கொண்டே வந்து விட்டார். இதை அறிந்த தயாரிப்பாளர் தாணு, நீ சம்பள விஷயத்தை பற்றி என்னிடம் கேட்க வேண்டியதுதானே? எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் சொல் என்று ஆறுதல் சொல்லி அவர் கேட்ட 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கொடுத்திருக்கிறார். இந்த தகவலை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தாணுவே கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.