இந்த சமயத்துல ஏற்ற அஜித் பாட்டு. அஜித் பிறந்தநாளுக்கு பாவனா சொன்ன வித்யாசமான வாழ்த்து.

0
1443
Bhavana
- Advertisement -

மீடியா துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து மீடியா துறையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் பாவனா பாலகிருஷ்ணனுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-

சிறு வயதிலையே பரதநாட்டியம் கற்றுக் கொண்ட பாவனா பாலகிருஷ்ணன், மீடியா துறையில் தனது பயணத்தை ஒரு ரேடியோ ஜாக்கியாக துவங்கினார். அதன் பிறகு ‘ராஜ் டிவி’யில் ஒளிபரப்பான ‘பீச் கேர்ள்ஸ்’ என்ற ஷோவை தொகுத்து வழங்கினார். இது தான் பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய முதல் ஷோவாம். ‘பீச் கேர்ள்ஸ்’ ஷோவிற்கு பிறகு முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘விஜய் டிவி’-யில் என்ட்ரியானார் பாவனா பாலகிருஷ்ணன்.

இதையும் பாருங்க : 7g, ஜெயம் படத்தில் நடித்த நடிகருக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள்களா.

- Advertisement -

‘விஜய் டிவி’-யில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பாவனா பாலகிருஷ்ணன். தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாவனா பாலகிருஷ்ணன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் ‘சர்வைவா’ என்ற பாடலுக்கு சம்யுக்தா நாயர் என்பவருடன் இணைந்து நடனமாடி அசத்தியிருக்கிறார் பாவனா. அவ்வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ‘சர்வைவா’ எனும் பாடல் இடம்பெற்ற படம் ‘விவேகம்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சிவா இயக்கியிருந்தார்.

இதையும் பாருங்க : அஜித்துடன் மீரா மிதுன். அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மீரா மிதுன்.

-விளம்பரம்-

இதில் ஹீரோவாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘தல’ அஜித் குமார் நடித்திருந்தார். இப்படத்திற்கு தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘ராக் ஸ்டார்’ அனிருத் இசையமைத்திருந்தார். நேற்று இந்த வீடியோ பதிவை பாவனா வெளியிட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நேற்று (மே 1-ஆம் தேதி) நடிகர் ‘தல’ அஜித்தின் பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை ஸ்டேட்டஸில் பதிவிட்டதோடு, இவ்வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார் பாவனா பாலகிருஷ்ணன்.

Advertisement