அஜித்துடன் மீரா மிதுன். அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மீரா மிதுன்.

0
5836
meera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு சளைக்காமல் இருந்து வந்தது. அதிலும் சமீபத்தில் முடிந்த மூன்றாவது சீசனில் பங்குபெற்ற ஒருசில போட்டியாளர்கள் செய்தசர்ச்சையான விஷயங்களால் இந்த சீசனின் டிஆர்பி எகிறி விட்டது என்றே கூறலாம். அந்த வகையில் சர்ச்சைக்கு மறு உருவமான மீராமிதுன் இந்த சீசனில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு போட்டியாளராக இருந்து வந்தா.ர் மாடலும் நடிகையுமான மீரா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

-விளம்பரம்-

மேலும், மாடல் அழகி என்ற பெயரில் இவர் பல்வேறு நபர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாகவும் ஜோ மைக்கேல் என்பவர் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து கொண்டே இருந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார் மீராமிதுன்.சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீரா மிதுன். அதற்கு முன்பே ‘8 தோட்டாக்கள்’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் பல்வேறு சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அதிலும் சமீப காலமாக சினிமாவை பிரபலங்களுடன் எப்போதோ எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று (மே 1) அஜித் பிறந்தநாளை முன்னிட்டு, அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் தான் நடித்ததாக குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த காட்சி படத்தில் வரவில்லையாம்.

மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாக அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த விஷயங்களால் இவர் நடித்த காட்சிகள் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

-விளம்பரம்-

இதனால் நம்ம வீட்டுப் பிள்ளை படக்குழுவினர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் மீராமிதுன். சரி, இந்த படத்தில்தான் எப்படி ஆனது என்றால் மீராமிதுன் நடிப்பதாக இருந்த அடுத்த படத்தில் இருந்தும் தற்போது அம்மணியை ஸ்கெட்ச் போட்டு தூக்கி விட்டனர்.நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து மீரா மிதுன்,  ‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.  ஆனால், இந்த படத்தில் இருந்து மீரா மிதுனை எந்தவித முன் அறிவிப்பையுமின்றி நீக்கியுள்ளனர்.

Advertisement