பிக் பாஸ் அமீர் வெளியிட்டு இருக்கும் திடீர் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அமீர். இவர் நடன இயக்குனர் ஆவார். இவரின் தந்தை இவர் சிறு வயது இருக்கும் போதே இறந்துவிட்டார். பின்னர் அமீர் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே இவரது அம்மா கொலை செய்யப்பட்டுவிட்டார். யாருடைய ஆதரவும் இன்றி தன் அம்மா ஆசைப்பட்டபடி ஒரு நடன பள்ளியை அமீர் நடத்தி இருக்கிறார்.

அதில் முதல் மாணவிகளாக சேர்ந்தவர்கள் தான் ஆலனா, ஆயிஷா. இந்த குட்டி பெண்கள் தான் அமீர் வாழ்க்கையை மாற்றினார்கள். அதன் பின்னர் அந்த குழந்தைகளின் அம்மாவான அஷ்ரப் – ஷைஜி என்பவர்கள் தான் அமீரை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று பார்த்து இருக்கிறார்கள். பின் இவர் பல நிகழ்ச்சிகளுக்கு நடனம் சொல்லி இருந்தார். இருந்தாலும் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
அமீர் குறித்த தகவல்:
இந்த நிகழ்ச்சியில் இவர் நடிகை பாவனியை காதலித்தது அனைவரும் அறிந்ததே. முதலில் இவர் காதலுக்கு நோ சொன்ன பாவனி ஒருவழியாக தன்னுடைய காதலை கூறிவிட்டார். அது மட்டும் இல்லாமல் இருவரும் சேர்ந்து விளம்பரம், ஆல்பம், படங்கள் என்று பிசியாக இருக்கிறார்கள். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த துணிவு படத்திலும் அமீர் -பாவனி சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

அமீர்-பாவனி திருமணம்:
அதுபோல் அமீர் ஒரு படத்தை இயக்கிக் கொண்டும் வருகிறார். பல படங்களில் நடன இயக்குனராகவும் கமிட் ஆகியிருக்கிறார். சமீபத்தில் தான் அமீர்-பாவனி இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்து இருந்தார்கள். ஏப்ரல் 20-ம் தேதி தான் இவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இதை வீடியோவுடன் அறிவித்திருக்கிறார்கள். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் அமீர் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், அனைவருக்கும் வணக்கம். நான் இப்பொழுது உங்களிடம் பகிர விரும்பும் செய்தி எனக்கு ரொம்ப மகிழ்ச்சியான ஒன்று.
View this post on Instagram
அமீர் அறிக்கை:
அது உங்களுக்கும் மகிழ்ச்சியை தரும் என்று நம்புகிறேன். முதலில் என்னை அன்போடு உங்களில் ஒருவனாகவும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் ஏற்றுக் கொண்டதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அது எனக்கும் மேலும் சந்தோசத்தை அளிக்கிறது. நான் திரையுலகில் எனது நடன இயக்குனராக பயணத்தை 2016 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை தமிழ் மற்றும் மலையாளம் நடன இயக்குனர் சங்கத்தின் ஆதரவோடும் உங்கள் ஆதரவோடும் சிறந்த முறையில் செய்து வருகிறேன். எனது வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றதை நான் உணர்கிறேன். இதில் நான் தமிழ் ரசிகர்களின் இதயங்களை என் வசப்படுத்தினேன் என்று நம்புகிறேன்.
இதன் மூலம் எனக்கு தமிழ் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிய வாய்ப்புகள் வந்தன. அதில் முக்கியமாக துணிவு மற்றும் ஸ்டார் ஆகிய படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், என் பாதையில் சில சவால்கள் எப்பொழுதுமே இருக்கும். இதிலும் இருந்தன. FEFSI நடன கலைஞர்களின் நலனுக்காக புதிய விதிமுறைகள் விதித்தது. அதனால் என்னால் அந்த இரண்டு படங்களிலும் பணிபுரிய முடியவில்லை. இன்று FEFSI மற்றும் FEFKA இரண்டு சங்கங்களின் விதிமுறைக்கு உட்பட்டு நடன இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. FEFSI டான்ஸ் யூனியன் தலைவர் டான்ஸ் மாஸ்டர் திரு உன்னி அவர்களுக்கு மற்றும் FEFKA டான்ஸ் யூனியன் தலைவர் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்றென்றும் என் பயணத்திற்காக ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கி உள்ளார்கள். இந்த புதிய அத்தியாயத்தை நான் புதிய உற்சாகத்துடன் துவங்க விரும்புகிறேன். மேலும் விரைவில் என் மற்ற அறிவிப்புகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.






