ரஜினி – முருகதாஸ் படத்தின் அடுத்த மிகப்பெரிய அப்டேட்.!

0
188
Rajini-166

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் செய்திகள் பல நாட்களாக அடிபட்டு வரும் நிலையில் இன்னும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.

Image result for rajini 166

இந்த படம் இந்திய அளவில் உள்ள அரசியல் பிரச்சினையை மையப்படுத்தியே இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற முருகதாஸ் இந்த படம் தனது முந்தைய படமான ‘சர்கார்’ போன்று அரசியல் சம்மந்தபட்ட கதையாக இருக்காது என்று விளக்கமளித்தார்.

- Advertisement -

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்க உள்ளது. சமீபத்தில் வந்த தகவலின்படி இன்று(ஏப்ரல் 3) இந்த படப்பிடிப்பிற்கான போட்டோ ஷுட்கள் நடைபெற்றதாகவும் அதில் ரஜினி கலந்து கொண்டதாகவும் நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விரைவில் வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது. இந்த தகவலால் ரஜினியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். விரைவில் இந்த படத்தை பற்றிய மற்ற அப்டேட்களை நமது வலைதளத்தில் தெரிவிக்கிறோம் அதுவரை எங்களோடு இணைந்து இருங்கள்.

Advertisement