விஜய் 63 பட்ஜெட் பிரச்சனை.! காரணம் இது தான்.! படப்பிடிப்பில் மாற்றம்.!

0
642
Vijay 63

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தவிர, கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

- Advertisement -

படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வந்தது. இதற்கு முன் சென்னையில் நடைபெற்ற வெளிப்புறப் படப்பிடிப்புகளில் விஜய்யைப் பார்க்க திரளான ரசிகர் கூட்டம் கூடியதால் படப்பிடிப்பு நடத்த சிரமமாக இருந்ததாம். ரசிகர்கள் யார் சொன்னாலும் கலைந்து போகாமல் அங்கேய நிற்பதால் திட்டமிட்டபடி காட்சிகளை எடுக்க முடியவில்லை என்கிறார்கள்.

இதையும் படியுங்க : கே ஜி எப் படத்தில் அசத்திய வில்லன் தமிழுக்கு வருகிறார்.! அதுவும் இந்த ஹீரோ படத்தில்.

எனவே, இனி படமாக்க உள்ள காட்சிகளை சென்னையில் உள்ள பிரபலமான பெரிய ஸ்டுடியோக்களில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து காட்சிகளை படமாக்க முடிவெடுத்துள்ளார்களாம். கடந்த மாதம் கூட சென்னை நேப்பியர் பாலத்தை பிரசாத் ஸ்டுடியோவில் செட்டாக அமைத்து அதில் இரவு நேரத்தில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.

-விளம்பரம்-

இப்படி செட்டுகளை அமைத்து படமாக்கினால் படத்தின் பட்ஜெட் அதிகமாகும். மேலும், ஏற்கெனவே படத்திற்கான பட்ஜெட் திட்டமிட்டதைவிட அதிகமாகிறது என்ற பேச்சும் எழுந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த விஜய் படங்கள் நன்றாக வசூலித்தாலும் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் குறைந்த லாபமும், சில ஏரியாக்களில் நஷ்டமும் வந்ததாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

Advertisement