பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. முதல் நாளான ஞாயிற்று கிழமை போட்டியாளர்களின் அறிமுகம் நடைபெற்றது. மேலும், நேற்றுடன் பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளை கழித்துள்ள போட்டியாளர்கள் மத்தியில் தற்போது சில அனல் பறக்கும் விவாதங்களும் கிளம்பியுள்ளது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சாக்ஷி மற்றும் இந்த வார தலைவியான வனிதாவிற்கு இடையே சாப்பாடு விஷயத்தில் ஒரு சூடான வாக்கு வாதம் நடைபெற்றது. அதற்கு அடுத்து வெளியான ப்ரோமோவில் மோகன் வைத்யா தனது தனிப்பட்ட பிரச்சனைகளை எண்ணி அழுது புலம்பினார்.
இதையும் பாருங்க : கவின் – அபிராமி காதலை கண்டு கடுப்பாகி ஓ** என்று திட்டிய கவினின் நெருங்கிய நண்பரும் நடிகரும்.!
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் மெயின் டூர் திறக்கிறது இதை வைத்து பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளர்கள் யாரேனும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.
அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் அல்லது மிர்னாலினி கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக சில நம்பகமான தகவலும் கிடைத்துள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டினுள் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்த சீசனில் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ஏற்கனவே தகவலும் வெளியாகி இருந்தது என்பதும் குறிபிடித்தக்கது.
அதே போல பவர் ஸ்டார் மற்றும் மிர்னாலினி இந்த சீசனில் கலந்து கொள்ள போகிறார்கள் என்றும் பல நம்பகரமான தகவலும் வெளியாகி இருந்தது. எனவே, இன்றைய நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் அல்லது மிர்னாலினி கலந்து கொள்வது ஓரளவிற்கு உறுதியான தகவலாக பார்க்கபடுகிறது. இன்றைய மூன்றாவது ப்ரோமோவை விஜய் டிவியின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவின் கமன்ட் செக்சனில் நீங்கள் காணலாம்.