பிக் பாஸில் நான் கலந்துகொள்ளப் போகிறேனா ? பாய்ஸ் பட நடிகர் வீடியோ மூலம் வெளியிட்ட விளக்கம்.

0
975
nakul
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி என்டிமால் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாம். எனவே, இனி வரும் 6 சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும். ஒருவேளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு பதிலாக வேறு யாரவது வரலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது.இப்படி ஒரு நிலையில் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் நகுல் கலந்து கொள்ளப்போகிறார் என்ற தகவல் வைரலானது.

மேலும், நடிகர் நகுலை பிக் பாஸ் 5வில் கலந்து கொள்ள வைக்க படு மும்மரமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள நகுல், பிக் பாஸில் கலந்து கொள்வதர்க்கு என்னை யாரும் அணுகவில்லை. மேலும், அப்படியே அழைத்தாலும் என் மகளை விட்டு நான் எங்கும் செல்வதாக இல்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement