தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதியாகியுள்ளது. .
இதையும் பாருங்க : அவங்கதான் மறுபடியும் அத பத்தி பேச கூப்பிட்டாங்க – தங்கள் மீது குற்றம் சாட்டிய பாடகியின் திடீர் மரணம் குறித்து செந்தில் கணேஷ்.
இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலியே முதன் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளராக கலந்துகொள்ள இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை ஷகீலா தத்தெடுத்த மகளாக வளர்த்து வரும் திருநங்கை மிலா தான். இந்த சீசனில் நடிகை ஷகீலாவை கலந்துகொள்ளவைக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது.
நடிகை ஷகீலா கன்னடத்தில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் 26 நாட்கள் மட்டுமே வசித்து வெளியேறியுள்ள நடிகை ஷகீலா, மீண்டும் தமிழ் பிக் பாஸில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என தெரிவிக்கின்றனர்.இதனால் அவரின் வளர்ப்பு மகள் மிளாவை பிக் பாஸ் 5 தமிழில் கமிட் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.