மணிரத்னம் படத்தில் ஒன்றாக நடித்துள்ள ஆரவ் மற்றும் குக்கு வித் கோமாளி அஸ்வின் – எந்த படத்தில் தெரியுமா ?

0
1112
mani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிய எத்தனையோ தொகுப்பாளர்கள் மற்றும் சீரியல் நடிகர்கள் தற்போது சினிமாவில் கலக்கி கொண்டு வருகின்றனர். சிவகார்த்திகேயன், சந்தானம் தொடங்கி சமீபத்தில் வந்த தீனா, புகழ் என பல பேருக்கு விஜய் டிவி தான் சினிமா வாய்ப்பை அமைத்து கொடுத்தது. அதே போல சினிமா வாய்ப்பை நம்பி தான் பல பேர் விஜய் டிவி நிகழ்ச்சிக்கும் செல்கின்றார்கள். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல பேருக்கு சினிமா வாய்ப்புகள் அமைந்துள்ளது.

-விளம்பரம்-

இதில் ஒரு சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே சினிமாவில் தலை காண்பித்தாலும் பிக் பாஸ் தான் இவர்களுக்கு பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ்வும் ஒருவர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே சைத்தான் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பிக் பாஸுக்கு பின்னர் தான் இவர் மார்க்கெட் ராஜா, ராஜா பீமா போன்ற படங்களில் ஹீரோவாக கமிட் ஆனார்.

இதையும் பாருங்க : குக்கு வித் கோமாளி ஷிவாங்கிக்கு அடித்த லக் – முதல் படமே இவருடன் தான்.

- Advertisement -

ஆனால், இவர் சைத்தான் படத்திற்கு முன்பாகவே, தமிழில் 2015 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓகே கண்மணி’ படத்தில் நடித்து இருந்தார். இதே படத்தில் தான் குக்கு வித் கோமாளி 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள அஸ்வினும் நடித்துள்ளார். நடிகர் அஸ்வினும் விஜய் டிவி பிரபலம் தான். அஸ்வின் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் இரட்டை வால் குருவி சீரியலில் நடித்தவர்.ஆனால் இவர் தொலைக்காட்சியில் மட்டுமல்ல படத்திலும் நடித்துள்ளார்.

அதே போல துருவ் விக்ரம் அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ படத்தில் துருவ் விக்ரமின் அண்ணனாகவும் நடித்து இருந்தார். மேலும், பிக் பாஸ் 3 புகழ் லாஸ்லியா முதன் முதலாக நடித்த blassoo beauty soap விளம்பரத்தில் கூட அஸ்வின் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் ஓகே கண்மணி படத்தில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று தான்.

-விளம்பரம்-
Advertisement