ரியா பாப்பாவுக்கு பார்ட்னர் கெடச்சாச்சி – மீண்டும் தந்தையான ஆரி. ரசிகர்கள் வாழ்த்து மழை.ரியா பாப்பாவுக்கு பார்ட்னர் கெடச்சாச்சி – மீண்டும் தந்தையான ஆரி.

0
2059
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஆரி அர்ஜுனாவும் ஒருவர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைசுழி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நெடுஞ்சாலை, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பின் ஆரி அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

- Advertisement -

முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் வென்று இருந்தார் ஆரி.

2010ஆம் ஆண்டு வெளியான ‘ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் நெடுஞ்சாலை என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஆரி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார்.நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். இளைய சமுதாயத்திற்கு விவசாயம் பற்றிய விழிப்புணவர்வை ஏற்படுத்திவருகிறார் ஆரி. இவருக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இவரது மகள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த அந்த எபிசோட், அந்த சீசனில் அதிக trp கொண்ட ஒரு எபிசோடாக அமைந்தது.

இப்படி ஒரு நிலையில் ஆரிக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது வந்தது. கடந்த சில மாதங்களாக ஆரியின் மனைவி கர்ப்பமாக இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள ஆரி ‘ 9 மாத காத்திருப்புக்கு பின் நான் என்னுடைய குட்டி இளவரசனின் பெருமைக்குரிய தந்தையாக ஆகிவிட்டேன். இப்போது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.

Advertisement