முகத்தை கூட பார்க்க விரும்பாத இனியா, சமாதானம் செய்த பாக்கியா – இனியாவின் கோபம் தணிந்ததா ?

0
1290
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலின் இன்று எபிசோடுக்கான ப்ரோமோ குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால், ரித்திகா என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் கோபி இடம் போட்ட சவாலில் பாக்கியா வெற்றி பெற்று வீட்டை தன்னுடைய பெயருக்கு மாற்றி விடுகிறார். இதனால் பாக்கியாவை பழிவாங்க கோபி நினைக்கிறார். இன்னொரு பக்கம் இனியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா 600க்கு 596 மதிப்பெண் வாங்கி இருக்கிறார். இதனால் தற்போது பள்ளியில் இனியாவிற்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. மாணவர்களும், ஆசிரியர்களும் இனியாவை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள்.

சீரியலின் கதை:

பின் மேடையில் இனியாவிற்கு பரிசு வழங்குகிறார்கள். அப்போது கோபியும் ராதிகாவும் போய் இனியா பக்கத்தில் நிற்கிறார்கள். இதனால் இனியா தன்னுடைய அம்மா வரவில்லை என்று வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் பழனிசாமி தாத்தாவும், பாக்யா சமைக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு நிச்சயதார்த்தம் நின்று பிரச்சனை நடைபெறுகிறது. பின் ஒரு வழியாக பிரச்சினையை முடித்து பழனிசாமியும், தாத்தாவும் பாக்கியாவை பள்ளிக்கு அழைத்து வருகிறார்கள். இனியா கோவப்பட்டு நிற்கிறார். இது தான் சந்தர்ப்பம் என்று கோபி இனியாவிடம் அன்பாக இருப்பது போல் பேசுகிறார்.

-விளம்பரம்-

இனியா ட்ராக்:

பின் இனியாவிடம் பேச பாக்யா முயற்சி செய்கிறார். ஆனால், இனியா பேசாமல் கதவை பூட்டிக்கொண்டு உட்கார்ந்து விடுகிறார். பின் தாத்தாவும் எழிலும் இனியா விடம் வந்து பேசுகிறார்கள். அதற்கு பின்பு சமையல் செய்யும் இடத்தில் நடந்த விஷயத்தை பாக்கியாவும் தாத்தாவும் சொல்கிறார்கள். மேலும், புரிந்து கொண்ட இனியா தன் அம்மாவை கட்டிபிடித்து எனக்கு உன்மேல் கோபமில்லை, வருத்தம் தான். மேலும், நான் தேர்வு எழுதும் போது எனக்கு உறுதுணையாக நின்றாய். ஆனால், நான் பரிசு வாங்கும் போது நீ இல்லை என்றவுடன் எனக்கு வருத்தமாக இருந்தது என்று பேசுகிறார்.

சீரியலின் டீவ்ஸ்ட்:

பின் எப்படியோ இனியாவும் பாக்கியமும் சமாதானம் ஆகி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் கோபியும் ராதிகாவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். கோபியின் மனைவி என்ற அங்கீகாரம் எனக்கு கிடைத்துவிட்டது. நான் தான் மேடையில் நின்றேன் என்று ராதிகா சொல்லி சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் இனியாவின் அடுத்த கட்ட படிப்பு குறித்து பாக்யாவும் இனியாகவும் தீவிரமாக பேசுகிறார்கள். இனி வரும் காலங்களில் இனியா ட்ராக் மாறுமா? இல்லை இனியாவின் படிப்பை வைத்து மீண்டும் கோபியும் பாக்கியாவும் சண்டை போடுவார்களா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Advertisement