ஆரி, பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஆரி குறித்து அவருடன் ‘எல்லாம் மேல இருக்கவன் பத்துப்பான்’ படத்தில் நடித்த ஷாஷ்வி, படப்பிடிப்பில் ஆரி நடந்து கொண்ட விதத்தைப் பற்றி கூறிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் அவர் கூறியதாவது பிக்பாஸ் வீட்டில் எப்படி அடுத்தவர்களுக்கு ஆரி அட்வைஸ் செய்கிறாரோ அப்படித்தான் படப்பிடிப்பிலும் இருந்தார். ஆனால் அவர் செய்யும் அட்வைஸ்களை அவர் பின்பற்ற மாட்டார் எனக்கும் நான் அறிமுக நடிகை என்பதால் பல அட்வைஸ்களை செய்திருந்தார் எனக்கு மட்டுமில்லை படப்பிடிப்பில் இருந்த அனைவருக்குமே தினமும் ஏதாவது பாடம் எடுத்துக் கொண்டே இருப்பார் ஒரு முறை மொட்ட ராஜேந்திரன் சாருக்கு கார் ஓட்டுவது போல ஒரு காட்சி சென்று கொண்டிருந்தது. சாருக்கு படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்த நாள் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு இருந்தது இதனால் அவர் அன்றைய படப்பிடிப்பை வேகவேகமாக முடித்திருந்தார்.
வீடியோவில் 12 நிமிடத்தில் பார்க்கவும்
ஆனால் அப்போது ஆரி உள்ளே சென்று தூங்கி விட்டார். ஒரு இரண்டு மணி நேரம் கதவை தட்டியும் அவர் திறக்கவே இல்லை அந்த நேரத்தில் அவருடைய மேனேஜரும் வெளியில் சென்றுவிட்டார் பின்னர் அவருக்கு பல முறை போன் செய்த பின்னர்தான் அவர் ஒரு வழியாக கதவை திறந்தார்இன்னொருத்தருக்கு வேறு ஒரு இடத்தில் படப்பிடிப்பு இருக்கிறது அவர் அடுத்த நாள் வேறு ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்று தெரிந்தால் நாம் அதற்கேற்றார் போல நடந்து கொள்ள வேண்டும் அவர் நடித்த காட்சிகளை கொஞ்சம் உதவி செய்து நடித்து கொடுத்து சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்.
இதையும் பாருங்க : அவ வெக்க படனும், பாடலை சுட்ட ராஜலக்ஷ்மியை வெளுத்து வாங்கிய பாடலுக்கு சொந்தக்காரர். வீடியோ இதோ.
ஆனால், அதன் பின்னரும் ஆரி மிகவும் நிதானமாக வந்து ரெடி ஆகி பின்னர் சூட்டிங்கிற்கு வந்தார் அங்கே நடந்த பிரச்சனை அவருக்கு தெரியும் ஆனால் அங்கு இருப்பவர்களை அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என்று அவருடைய மேனேஜருக்கு போன் செய்து திட்டிக் கொண்டே இருக்கிறார். இப்படி தான் ஆரி படப்பிடிப்பில் நடந்து கொண்டார் என்று கூறினார் ஷாஷ்வி. இந்த வீடியோ வைரலாக பரவ ஆரியின் ரசிகர்கள் பலர் இவரை திட்டி தீர்த்து இருந்தனர்.
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இதுவரை எனக்கு இப்படியெல்லாம் நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது கிடையாது. ஆனால், கடந்த சில மாதத்திற்கு முன்னர் நான் ஆரி பற்றி பேசிய விஷயத்திற்காக அவரது ரசிகர்கள் பலரும் என்னை திட்டி தீர்த்து வருகிறார்கள். நான் அவரை பற்றி ஒன்றும் தவறாக பேசவில்லை. அவர் ஷூட்டிங்கில் எப்படி இருப்பார் என்பதை தான் சொன்னேன். மேலும், நான் இல்லாத விஷயத்தை ஒன்றும் சொல்லவில்லையே.
நான் பேசியது அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாத போது உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை. என்னை திட்டி தீர்க்கும் அளவிற்கு அவ்வளவு சீன் கிடையாது என்று கூறியிருக்கிறார். ஆனால், ஆரி பற்றி நீங்கள் என்ன பேசினீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும் என்று இவர் ஆரி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இவர் அளித்த பேட்டி பற்றி பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.