விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஐந்து வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முகம் தெரிந்த நபர்களை விட தெரியாத நபர்கள் தான் அதிகம் கலந்திருந்தார்கள். அந்த வகையில் தெரியாத நபராக நிகழ்ச்சியில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் அபிநய். இவர் வேற யாரும் இல்லைங்க காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பேரன் ஆவார்.
மேலும், அபிநய் அவர்கள் ராமானுஜம், சென்னை 6000028-2 போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த ஆரம்பத்திலிருந்தே இவர் நன்றாக விளையாடி வந்தார். பின்னர் அபிநய்-பாவனி இவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இவருடைய பெயர் டேமேஜ் ஆனது என்றே சொல்லலாம், அதிலும் இவர் பாவனிக்கு லெட்டர் எழுதி கொடுத்த இருந்த விஷயம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது.
அபிநய் – பாவனி சர்ச்சை:
இதற்கு கமலஹாசன் முதல் போட்டியாளர்கள் வரை என பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி இருந்தார்கள். பிறகு அபிநய் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 70 நாட்களுக்கு மேல் விளையாடி வெளியேறிவிட்டார்.அது மட்டுமில்லாமல் நிகழ்ச்சிக்கு பிறகு அபிநய் மற்றும் அவருடைய மனைவி அபர்ணா இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து இருப்பதாக சோஷியல் மீடியாவில் பல்வேறு வதந்திகள் எல்லாம் எழுந்தது.
அபிநய் பெயரை நீக்கிய அபர்ணா :
இப்படி ஒரு நிலையில் அபிநய்யின் மனைவி அபர்ணா, தன்னுடைய பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாற்றி இருந்தார். இதற்கு முன் வரை அபர்ணா அபிநய் என்று பெயர் வைத்து இருந்த இவர் அபிநய் பெயரை நீக்கிவிட்டு அபர்ணா வரதராஜன் என்று மாற்றி இருந்தார். இவர் இப்படி மாற்றி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் அல்டி மேட் நிகழ்ச்சிக்கு சென்ற அபிநய் மூன்றாவது வாரம் வெளியேற்றப்பட்டார்.
அபிநய் கொடுத்த விளக்கம் :
மீண்டும் அபிநய் வந்த பிறகு எல்லோரும், நீங்களும் உங்கள் மனைவியும் பிரிந்து விட்டீர்களா? என்னாச்சு? ஏதாச்சு? என்று பல்வேறு விமர்சனங்களை எழுப்பி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர், உங்களுக்கு விவகாரத்து ஆகிடுச்சா என்று கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த அபிநய், இந்த செய்தியை கேட்டு நான் முதலில் ஷாக் ஆனேன். இது தவறான நபர்களால் பரப்பப்படுகிறது. இது உண்மை இல்லை ‘ என்று தெரிவித்து இருந்தார்.
விவாகரத்து குறித்து பதிவிட்ட அபர்ணா :
இந்நிலையில், அபிநய்யின் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து குறித்து பதிவிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதன்படி, விவாகரத்து ஆகும் போது பெண்களுக்கும் ஜீவனாம்சம் தரும் நிலை வர வேண்டும் என தெரிவித்துள்ள அவர். அதுதான் உண்மையான gender equality எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், இப்படி ஒரு பதிவு தேவையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இன்று தனது மனைவியின் பிறந்தநாளில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு சர்ச்சைக்கு மீண்டும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அபிநய்.