‘நீயெல்லாம் நேர்கொண்ட பார்வை படத்துல நடிச்சது தான் கொடும’ – அபிராமியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

0
781
Abhirami
- Advertisement -

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து பிக் பாஸ் பிரபலம் அபிராமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை அடுத்த திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் இந்த கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் இருந்து பல முக்கிய கலைஞர்களை நம் நாட்டிற்கு இந்த நிறுவனம் வழங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் நாடாளுமன்றத்திலும் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி கலாஷேத்ரா தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இங்கு பல பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்திருக்கின்றது. இதனால் கலாஷேத்ரா அறக்கட்டையின் கீழ் இயங்கும் இந்த கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீதான ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கின்றனர். ஆரம்பத்தில் இது வதந்தி என்று கூறப்பட்டது.

- Advertisement -

கலாஷேத்ரா கல்லூரி மீதான புகார்:

பின் கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்தும், அத்துமீறி மிரட்டியும் நடந்ததாகவும் மாணவிகள் புகார் அளித்து இருந்தார்கள். மேலும், பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது மாணவிகள் கல்லூரி இயக்குனர் ரேவதி இராமச்சந்திரன் இடம் புகார் அளித்தார்கள். ஆனால், அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்தால் கல்லூரியின் பெருமை சீர்குலையும் என்றும் இந்த மாதிரி கட்டுக் கதைகளை பேசக்கூடாது என்றும் நிர்வாகம் மாணவிகளுக்கு தடை விதித்தது.

கலாஷேத்ராவில் விசாரணை குழு:

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தின் வெளியே போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். இந்த விஷயம் பெரிய பூகம்பமாக வெடித்தது. மாணவிகள் கொடுத்த ஆதாரங்களை எல்லாம் திரட்டி தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கலாஷேத்ரா அறக்கட்டளையில் பேராசிரியர் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை குழு ஒன்று அமைத்தது. ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தாமான் இருக்கின்றனர். மேலும், மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஹரிபத்மன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார் .

-விளம்பரம்-

நடிகை அபிராமி அளித்த பேட்டி:

சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இது குறித்து நடிகை அபிராமி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு கலாஷேத்ரா பத்தி பேச விருப்பமில்லை. நானும் இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி தான். ஒரு பக்கம் இருக்கும் தரப்பை வைத்து மட்டும் பேசக்கூடாது. நான் பல வருடமாக இந்த கல்லூரியில் இருந்தேன். இந்த கல்லூரியின் மூலம் பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். பல மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போதெல்லாம் இந்த மாதிரி எந்த ஒரு குற்றச்சாட்டும், புகாரும் எழுந்தது கிடையாது.

கலாஷேத்ரா குறித்து சொன்னது:

நான் இந்த கல்லூரியின் நிர்வாகி ரேவதி மேடமுக்கு தான் ஆதரவாக நிற்பேன். கலாஷேத்ரா என்ற பெயரை ஒழுங்காக சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த கல்லூரியை பற்றி குறை கூறுவது ரொம்ப மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. 10 வருடம் ஆக இந்த பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிறார்கள். ரேவதி மேடம் அப்போதெல்லாம் இந்த கல்லூரியை நிர்வகிக்கவில்லை. குற்றம் சாட்டிருக்கும் ஆசிரியருக்கு ஒரு வாய்ப்பை தரவில்லை.

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

அவரிடம் என்ன? ஏது? என்று கேட்காமல் தண்டனை கொடுப்பது சரி இல்லை. இந்த கல்லூரிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்று போலீஸ், மீடியா வருவதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், தற்போது இந்த புகார் வந்தது நினைத்தால் மனது வலிக்கிறது. ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பும் விசாரித்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். அபிராமியின் இந்த கருத்தை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவரெல்லாம் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது தான் கொடுமை என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement