சன் நியூஸ், டாப் 10 மூவிஸ் – 90ஸ் ரசிகர்கள் மறக்க முடியாத ரத்னாவிற்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா.

0
336
Ratna
- Advertisement -

சினிமாவை பார்க்காமலேயே 18 வருஷமாக திரை விமர்சனம் செய்து இருக்கிறேன் என்று நியூஸ் ரீடர் ரத்னா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் மிகப் பிரபலமான செய்தி வாசிப்பாளராக திகழ்பவர் ரத்னா. இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு செய்தி வாசிப்பின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் செய்தி வாசிப்பாளராக 28 வருடமாக பயணித்து வருகிறார். இருந்தாலும், இது அவருடைய பார்ட் டைம் ஜாப் தான். இவர் கார்மென்ட் பிஸினஸ் தான் முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமீபத்தில் செய்தி வாசிப்பாளர் ரத்னா பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், என்னுடைய குடும்பத்தில் எனக்கு மட்டும்தான் தமிழின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அதோடு உலக நடப்பு விஷயங்களையும் தெரிந்து கொண்டு என்னுடைய நண்பர்களுடன் விவாதிக்கவும் செய்வேன். அதனாலயே எனக்கு நியூஸ் ரீடர் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தனியார் சேனல்கள் இல்லாத காலத்தில் பொதிகையில் செய்தி வாசிப்பாளர் வேலைக்கு சென்றேன். எம்.காம்., காஸ்ட் அக்கவுன்டிங் கோர்ஸ் முடித்துவிட்டு 1989 ஆம் ஆண்டு பொதிகை சேனலில் வாய்ப்பு கேட்டு சென்றிருந்தேன்.

- Advertisement -

முதல் வேலை :

அங்கு 250 பேருக்கு மேல் செய்தி வாசிப்பாளர் வேலைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் என்னுடன் இரண்டு பேர் மட்டும் இந்த வேலைக்கு தேர்வாகியிருந்தார்கள். பின் நான் பொதிகை சேனலில் சில மாதம் வேலை செய்து சிறிய பிரேக் எடுத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு சன் டிவியில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது இருந்து இப்ப வரை நியூஸ் ரீடராக சன் டிவியில் என்னுடைய பயணம் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், சன் டிவியில் சேர்ந்த பிறகு தான் என்னுடைய கிராப் உயர்ந்தது என்று சொல்லலாம். இந்த மீடியா உலகத்தில் ஏராளமான மகிழ்ச்சியான, சுவாரசியமான, துக்கமான தருணங்கள் எல்லாம் சந்தித்து இருக்கிறேன்.

மறக்க முடியாத சம்பவம் :

அதில் சுனாமியும், கும்பகோணம் தீ விபத்தும் என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத துயர சம்பவங்கள். சுனாமி வீடியோ கிளிப்ஸ் எல்லாம் பார்த்ததும் ஹாலிவுட் படத்தில் பார்க்கிற மாதிரியே இருந்தது. இந்த செய்தி நிஜமா? கனவா? என்று என் மனதுக்குள்ளே சில வினாடிகள் கேள்வி இருந்தது. அந்த செய்திகளில் நூற்றுக்கணக்கான உயிர்கள் இறந்ததை சொல்லிக் கொண்டு இருந்தோம். அந்த காட்சிகளை பார்க்கும்போது மனசுக்குள் பயங்கரமான ஆதங்கமும், போராட்டமும் இருந்து கொண்டிருந்தது. அதேபோல கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்து அவர்களுடைய உடல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போவதை பார்த்து வாசிக்கும்போது என்னுடைய மனசுக்குள் சொல்ல முடியாத துக்கம்.

-விளம்பரம்-

திரைவிமர்சனம் குறித்து சொன்னது:

இந்த மாதிரி செய்திகள் எல்லாம் படிக்கும்போது தனிப்பட்ட உணர்வுகளை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் செய்தி படித்து விட வேண்டும். பின் வீட்டுக்கு வந்து பயங்கரமாக அழுவேன். இந்த மாதிரி நிறைய தருணங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது. மேலும், திரை விமர்சனம் நிகழ்ச்சியை உமா பத்மநாபன் மேடம் தான் வழங்கி இருந்தார்கள். ஆனால், அவர்கள் வணக்கம் தமிழகம் என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்க சென்று விட்டார்கள். இதனால் திரைவிமர்சனத்தை தொகுத்து வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்கு பிறகு அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 18 வருடங்களாக 850 எபிசோடுகளை அந்த நிகழ்ச்சி கடந்து இருக்கிறது. உலகம் முழுக்க எனக்கு மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது திரைவிமர்சனம் நிகழ்ச்சி தான்.

சினிமா வாய்ப்பு:

வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகள் தமிழ்நாடு முழுக்க பெரும்பாலான ரசிகர்கள் ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொண்ட பின் தான் படத்தை பார்க்கவே போவார்கள். ஆனால், பெரும்பாலும் படங்களை நான் பார்க்காமலேயே எங்கள் குழு தயாரித்து கொடுக்கிற தகவலை மட்டும் தான் படிப்பேன். அந்த படத்தை பார்க்கலாமா? நல்லா இருக்கான்னு? கூட என்னை சந்தித்தும், போன் மூலமாகவும் கேட்பார்கள். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் நடிக்கிற வாய்ப்பு எனக்கு பலமுறை வந்தது. ஆனால், நான் அதை மறுத்துவிட்டேன். சினிமாவில் செய்தி வாசிக்கிற மாதிரியான காட்சிகளில் தான் நான் நிறையவே தோன்றியிருக்கிறேன். இப்படி 28 வருஷமாக மீடியாவில் தொடர்பில் இருக்கிறேன். இருந்தும் இது ஒரு பார்ட் டைம் வேலையாக தான் இருக்கிறது. நான் கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் வேலையை பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறேன். இப்படி மீடியா, பிசினஸ், இசை, தியானம், யோகா என்று எப்போதும் சந்தோஷமாக இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்று புன்னகையுடன் கூறியிருந்தார்.

Advertisement