இணையத்தில் வைரலான தனது அந்தரங்க வீடியோ குறித்து விளக்கம் கொடுத்த அபிராமி.

0
520
- Advertisement -

பிக் பாஸ் அபிராமியின் டீப் பேக் நிர்வாண வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகவே தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகமாகி கொண்டிருக்கின்றது. எந்த அளவிற்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நன்மை இருக்கிறதோ அதே அளவிற்கு தீமையும் இருக்கிறது. AI என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இதன் மூலம் எளிதாக போலிகளை உருவாக்கி விட முடியும்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இதை வைத்து சினிமா பாடல்களை மோடியின் குரலில் வைரல் ஆக்கியிருந்தார்கள். பின் வயதான நடிகர்களை இளமையான தோற்றத்தில் காட்டி இருந்தார்கள். தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகி இருக்கும் பாடல் திமிறி எழுடா. இந்த பாடலில் மறைந்த பாடல்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோருடைய குரல் AI உதவியுடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

- Advertisement -

டீப் ஃபேக் வீடியோ:

இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல் மலையாள நடிகர் மம்மூட்டியை 30 வயது வாலிபன் தோற்றத்தில் ஒரு படத்தில் AI உதவியுடன் காட்டி இருக்கிறார்கள். இப்படி சினிமாவில் சில நன்மைக்கு ஏற்ப ஏ ஐ டெக்னாலஜிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஏஐ பயன்படுத்தி டீப் பேக் வீடியோக்களை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், ஆலியா பட் போன்ற பாலிவுட் நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.

அபிராமி வெங்கடாச்சலம் வீடியோ:

இது பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது இந்த விவகாரம் கோலிவுட் பக்கமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். தற்போது இவருடைய நிர்வாண வீடியோ தான் வெளியாகி இருக்கிறது. இது AI மூலம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அபிராமி வெங்கடாச்சலம் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அபிராமி வெங்கடாச்சலம் பதிவு:

அதில் அவர், நான் என்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி ஒரு விஷயம் நடக்கக்கூடாது. சமீப காலமாக டீப் பேக் வீடியோ பிரபலமாகி வருவது ரொம்ப வருத்தத்தை தருகிறது. இதன் மூலம் யார் வேண்டுமானாலும் நம்மை மோசமாக காட்டலாம். இது ரொம்ப பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான் சொல்ல விரும்புவது ஒன்று தான். இதை உருவாக்கியவன் குற்றவாளி. ஆனால், அதை பகிர்ந்து இன்பம் அனுபவிப்பவன் அதைவிட பெரிய குற்றவாளி. கவலை வேண்டாம் அவர்களுக்கு இந்த பிரபஞ்சம் கண்டிப்பாக தக்க பாடத்தை கொடுக்கும். நான் தைரியமான பெண்.

டீப் பேக் வீடியோ:

என்னுடைய வலிமையை யாராலும் தவிர்க்க முடியாது. தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதைத் தவிர மற்ற எல்லாவிதமான கீழ் தரமான வேலைகளும் இங்கு நடக்கிறது. பெண்களின் டீப் ஃபேக் வீடியோவை பார்ப்பதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது என்று தெரியவில்லை? நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இது போன்ற மற்ற பெண்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தற்போது நான் பேசுகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக நான் போலீசிலும் புகார் அளிக்க முடிவெடுத்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement