சேஷு, டேனியல் பாலாஜியை தொடர்ந்து காலமான மற்றொரு நடிகர் – சோகத்தில் திரைத்துறை

0
271
- Advertisement -

நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் திடீரென்று காலமாகி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே பிரபலங்களின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு பல பிரபலங்கள் உடல்நிலை குறைவால் இறந்திருக்கிறார்கள். கடந்த மாதம் கூட நகைச்சுவை நடிகர் சேசு அவர்களுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார்.

-விளம்பரம்-

பின் திடீரென்று இவர் இறந்துவிட்டார். இவரை அடுத்து கடந்த வாரம் நடிகர் டேனியல் பாலாஜியும் திடீர் மாரடைப்பால் இறந்து விட்டார். இவர் மறைந்த நடிகர் முரளியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் மறைவே ரசிகர்களின் மனதில் நீங்காத நிலையில் தற்போது நகைச்சுவை நடிகர் விஸ்வேஸ்வரா இறந்திருக்கும் செய்திதான் சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

விஸ்வேஸ்வரா குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்த மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஸ்வேஸ்வரா ராவ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் சினிமாவில் எழுத்தாளர் ஆக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு பிறகு இயக்குனர் ஆனார். அப்படியே படங்களில் நடித்தும் வந்தார்.

விஸ்வேஸ்வரா ராவ் திரைப்பயணம்:

இவர் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி படத்தில் கூட நடித்து இருக்கிறார். அதிலும் இவர் விக்ரம்- சூர்யா நடிப்பில் வெளிவந்த பிதாமகன் என்ற படத்தில் லைலாவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

விஸ்வேஸ்வரா சின்னத்திரை:

இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் பல சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருடைய படைப்புகளான நாக்னா சத்யம், ஹரிச்சந்துருடு போன்ற படங்களுக்காக இவர் இரண்டு தேசிய விருதுகளையும் வாங்கி இருக்கிறார். அதோடு இவருடைய நகைச்சுவை எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

விஸ்வேஸ்வரா இறப்பு:

இப்படி இருக்கும் நிலையில் இன்று அதிகாலை இவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு காலமாகி இருக்கிறார். இவருடைய உடலை சிறுசேரியில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலங்கள் பலரும் இவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை இவருடைய இறுதி தகனம் நடைபெற இருக்கிறது.

Advertisement