விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகென் ராவ். இந்த சீசனில் காதல் காவியங்கள் கொடிகட்டி பறந்தது. அதில் முதன் முதலில் அபிராமி தான் காதலை தொடங்கி வைத்தவர். அபிராமி முதலில் கவினின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால்,கவின் கொஞ்சம் கூட அபிராமியை கண்டுகொள்ளவில்லை. பின்னர் கவினை கடுப்பு ஏற்றுவதற்காக தான் முகென் உடன் பழகினார். முதலில் நண்பனாக பழகினார் அபிராமி. பின் அவர் மீது அதுவே காதலாக மாறிவிட்டது.
நாட்கள் செல்ல செல்ல முகென் மீது வைத்திருந்த அன்பு, பாசம் அனைத்தும் காதலாக மாறிவிட்டது என்று அவர் கூறியிருந்தார். அது மட்டும் இல்லைங்க கமலஹாசன் அவர்கள் போட்டியின்போது ஹீரோ யார்? வில்லன் யார் ?என்ற டாஸ்க் வைத்திருந்தார், அதில் அபிராமி கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னுடைய ஹீரோ முகென் தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். இதிலிருந்து அவர் அந்த அளவிற்கு முகென் மீது பைத்தியமாக காதல் செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து சக போட்டியாளர்களும் முகென் இடம் பேசினார்கள்.
இதையும் பாருங்க : தனது மோசமான புகைப்படத்தை நிகழ்ச்சியில் காட்டியதால் கோபத்துடன் நிகழ்ச்சியில் இருந்து சென்ற ஷாலு ஷம்மு.
ஆனால், முகென் ஏற்கனவே அபிராமிடம் நண்பனாக தான் பழகுகிறேன் என்று கூறினார். மேலும்,அபிராமி தன்னிடம் பழகுவது குறித்து முகென் கூறியது, நான் ஏற்கனவே நதியா என்ற பெண்ணை காதலித்து வருகிறேன். ஆனால், அப்போதும் அபிராமி, முகெனை விடுவதாக இல்லை. மேலும் ,பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் எங்கள் காதல் குறித்து பேசுவோம். அதுமட்டுமில்லாமல் எங்கள் வாழ்க்கை குறித்தும் நாங்கள் இருவரும் பேசி உள்ளோம் என்று கூறினார். இவ்வளவு பொறுமையாக முகென் எடுத்துச் சொல்லியும் அபிராமி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறும் வரை தீவிரமாக முகெனை காதலித்துக் கொண்டுதான் இருந்தார்.
கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு முகென், நதியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலை உறுதி செய்தார். இந்த நிலையில் அபிராமி, தனது டிக் டாக்கில் முகென் டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை பதிவிட்டு அதில் ‘ஐ லவ் யூ சோ மச் பேபி’ என்று பதிவிட்டுள்ளார். ஆனால், இதே வீடீயோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அபிராமி, வாவ் சூப்பர் மைடியர் பிரண்ட் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்க்கும் போது டிக் டாக் காதல், ட்விட்டரில் நட்பா என்பது போல தான் தோன்றுகிறது.