‘வண்ட வண்டயா கேட்பேன்’ – பிக் பாஸ் குறித்து பேசிய வீடியோவிற்கு அபிஷேக்கே கொடுத்த ஆவேசமான விளக்கம்.

0
5761
abishek
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் மூன்று வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.

-விளம்பரம்-

பொதுவாக பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே ஹேட்டர்ஸ்கள் உருவாவார்கள். ஆனால், உள்ளே செல்லும் போதே ஹேட்டர்ஸ்களுடன் சென்றவர் அபிஷேக் தான். அதிலும் இவர் பிக் பாஸில் நடந்து கொண்ட விதத்தால் பலரும் இவரை மேலும், வெறுக்கத் துவங்கினர். கடந்த வாரம் கமல், யாரெல்லாம் பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று கேட்ட போது கூச்சமில்லாமல் கையை தூக்கி நான் பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று கூறினார் அபிஷேக்.

இதையும் பாருங்க : அதில் எனக்கு உடன்பாடு இல்லை, அதனால் – காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலக காரணம் என்ன ? தர்ஷன் கொடுத்த ஷாக்

- Advertisement -

அதற்க்கு முன்பாகவே அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மேடையில் தர குறைவாக பேசிய வீடியோ வைரலானது. அதில் 100 நாள்ல Cm ஆகணும்னு நீங்க செய்ற வேலை இருக்கே, கேட்டா பிக் பாஸ்னு சொல்றீங்க முடியலடா என்று பேசி இருந்தார். அதே போல பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று சொன்ன அபிஷேக், நாடியாவை வனிதா என்றும் மதுவை லாஸ்லியா என்றெல்லாம் ஒப்பிட்டார்.

மேலும், நேற்றய நிகழ்ச்சியில் கூட அபிஷேக்கை பிக் பாஸ் பார்த்ததே இல்லையா என்று கேட்ட போது, பார்த்தது இல்லை, ப்ரோமோ மட்டும் பார்ப்பேன், நீங்க வார நாட்கள்ல மட்டும் பார்ப்பேன் என்றெல்லாம் உளறினார் அபிஷேக். இதை கேட்டு கமலே சிரித்துவிட்டார். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பிக் பாஸுல் இருந்து வெளியேறிய பின்னர் அளித்த பேட்டியில் கூறிய அபிஷேக், நான் இப்பவும் சொல்றேன் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தது இல்லை.

-விளம்பரம்-

இது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது கமல் சாரைப் பற்றி சினிமா சம்பந்தமாக அதிக வீடியோவை போட்டது நான்தான் நான் அவர் எவ்வளவு பெரிய ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த பட்டிமன்றத்தில் நான் போட்டியாளர்களை பற்றி தான் பேசியிருந்தேன் அந்த சமயத்தில் oviyaforcm என்ற ஹேஷ் டேக் சென்று கொண்டு இருந்தது அதை குறிப்பிட்டு தான் பேசி இருந்தேன். என்ன hypocrite என்று சொன்னால் வண்ட வாண்டையாக கேட்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Advertisement