‘சரி, எனக்கும் வேற வழி இல்ல’ – பாரினில் படித்த கார்த்தியிடமே பீட்டர் விட்டு பல்ப் வாங்கிய சினிமா பையன் அபிஷேக் ராஜா.

0
402
abhishekraja
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் ரசிகர்களுக்கு பல பரிட்சயமான பல போட்டியாளர்களால் கலந்துகொண்டு இருந்தாலும் யூடுயூபில் விமர்சனங்களை பார்க்கும் நெட்டிசன்களுக்கு அபிஷேக் ராஜாவை பற்றி நிச்சயம் தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது.

-விளம்பரம்-

பொதுவாக பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே ஹேட்டர்ஸ்கள் உருவாவார்கள். ஆனால், உள்ளே செல்லும் போதே ஹேட்டர்ஸ்களுடன் சென்றவர் அபிஷேக் தான். அதிலும் இவர் பிக் பாஸில் நடந்து கொண்ட விதத்தால் பலரும் இவரை மேலும், வெறுக்கத் துவங்கினர். கடந்த வாரம் கமல், யாரெல்லாம் பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று கேட்ட போது கூச்சமில்லாமல் கையை தூக்கி நான் பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று கூறினார் அபிஷேக்.

- Advertisement -

இதையும் பாருங்க : பாக்கியலட்சுமி சீரியலை விட்டு போக முடிவெடுத்த கோபி ? – புலம்பி வெளியிட்ட வீடியோ இதோ.

அளப்பதில் மன்னன் :

அதற்க்கு முன்பாகவே அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மேடையில் தர குறைவாக பேசிய வீடியோ வைரலானது. அதில் 100 நாள்ல Cm ஆகணும்னு நீங்க செய்ற வேலை இருக்கே, கேட்டா பிக் பாஸ்னு சொல்றீங்க முடியலடா என்று பேசி இருந்தார். அதே போல பிக் பாஸ் பார்த்ததே இல்லை என்று சொன்ன அபிஷேக், நாடியாவை வனிதா என்றும் மதுவை லாஸ்லியா என்றெல்லாம் ஒப்பிட்டார்.

-விளம்பரம்-

பிக் பாஸில் வாங்கிய பல்ப் :

இவரது முன்னுக்கு பின்னான பேச்சுகளால் இவருக்கு மேலும் ஹேட்டர்ஸ்கள் உருவாகினார். இதனால் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். இருப்பினும் இவர் வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டு இருந்தது. இதனால் இவரை மீண்டும் உள்ளே அனுப்பினாள் சுவாரஸ்யம் கூடும் என்று நம்பி இவரை வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர்.

பிரபலங்களிடம் வாங்கிய பல்ப் :

தன்னுடைய முதல் என்ரியின் போது செய்த கிறுக்குத்தனம் எல்லாம் தன்னுடைய இரண்டாம் என்ரியின் போது குறைத்துக்கொண்டார் அபிஷேக். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் இவர் பல பிரபலங்களை பேட்டி எடுத்தார். அதிலும் குறிப்பாக விஜய் ஆண்டனி, அருள்நிதி என்று இவர் பேட்டி எடுத்த போது அவர்கள் இருவருமே இவருக்கு செம பல்ப் கொடுத்து இருந்தனர்.

செம நோஸ் கட் கொடுத்த கார்த்தி :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் கார்த்தியை பேட்டி எடுத்து இருந்தார். அப்போது வழக்கம் போல புரியாத பல ஆங்கில வாரத்திகளை பேசி பீட்டர் விட்டுக்கொண்டு இருந்தார் அபிஷேக். ஒருகட்டத்தில் கார்த்தி ‘நீ எப்போதும் புத்திசாலித்தனமா தான் பேசுவீங்க, நாம எல்லாம் தர ஆடியன்ஸ்’ என்று கூறி பல்ப் கொடுத்தார். அப்போதும் அபிஷேக் ஆங்கிலத்தில் பேச ‘நீ எப்பயும் ஓவரா தான் பேசுவ, எனக்கு வேற வழி இல்ல’ என்று கார்த்தி சொல்ல ‘என்ன சார் That is my அடையாளம்’ என்று சமாளித்தார் சினிமா பையன்.

Advertisement