தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று சொன்ன கோலி – அப்போ 9 ஸ்போர்ட்ஸ் கார் எதற்கு சைக்கிள் போதுமே என்று வறுத்தெடுத்த பிக் பாஸ் 3 நடிகை.

0
1175
- Advertisement -

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி வேண்டுகோள் விடுத்த வீடியோவை பிரபல நடிகை விமர்சித்து இருக்கிறார் இந்தியாவில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தீபாவளி கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்கக்க்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அதையும் மீறி பல இடங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு தேசிய தலைநகரம் முழுவதும் பல இடங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசமானது’.  அதோடு, டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகைமண்டலம் சூழ்ந்திருந்தது.

-விளம்பரம்-

ஏற்கனவே மாசுபட்டிருக்கும் காற்று, பட்டாசுகளை வெடிப்பதால் மேலும் மோசமாகி சுற்றுச்சூழல் அதிக பாதிப்புள்ளாகிறது. தமிழகத்தில் கூட காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அழைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த விதிகளை பொருட்படுத்தாமல் மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருந்தார்கள். வருடத்திற்கு ஒருமுறை பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடாது என்பதே பலரின் கருத்தாக இருந்து வந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் விராட் கோலி. 2020 ஐபிஎல் தொடரை முடித்து விட்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது, அங்கே கிரிக்கெட் தொடரில் ஆடும் முன் குவாரன்டைனில் உள்ளனர். இந்திய வீரர்கள் அங்கேயே தீபாவளியை ஹோட்டல் அறையில் இருந்தவாறு கொண்டாடி இருந்தார்கள். இந்த நிலையில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி விராட் கோலி தீபாவளி வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீபாவளி நன்னாளன்று கடவுள் உங்களுக்கு அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கட்டும். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். வீட்டில் விளக்கு ஏற்றி, இனிப்பு பலகாரம் சாப்பிட்டு குடும்பத்தினருடன் நிம்மதியாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார், டேக் கேர். ” என்று குறிப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

விராட் கோலியின் இந்த வீடியோ ரசிகர்களின் விமர்சனங்களுக்கு உள்ள்ளானது. அதில் சில தினங்களுக்கு முன் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் வாண வேடிக்கைகளை மற்றும் பட்டாசுகள் வெடித்ததை குறிப்பிட்ட ரசிகர்கள், ஒரு நாளில் மட்டும் சுற்றுச்சூழலை பாதுகாத்தால் போதுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி விராட் கோலியின் இந்த வீடியோவை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், பல இளைஞ்சர்களுக்கு யூத் ஐகானாக திகழும் கோலி போன்ற நபர்கள் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதற்கு முன்பு இந்தியாவின் பட்டாசுத் தொழிலின் தாயகமான தமிழ்நாட்டின் சிவகாசியில் ஆயிரக்கணக்கான நேர்மையான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். தீபாவளி பண்டிகை என்பது அவர்களுக்கு உணவளிக்கும் ஒரு பண்டிகை, திருவிழா கொண்டாட்டம் அல்ல.

தீபாவளிக்கு பட்டாசு வேண்டாம் தீப ஒலி போதும் கண்டிப்பாக, ஆனால் ஒலி மற்றும் காற்று மாசை ஏற்படுத்தும் 9 ஸ்போர்ட்ஸ் கார்கள் எதற்கு மிதிவண்டி போதுமே. திருமணத்திற்காக எதற்கு சொகுசு விமானத்தில் வெளிநாடு செல்ல வேண்டும் இங்கேயே லோக்கலில் பதிவுத்திருமணம் போதுமே, என்று பதிலடி கொடுத்திருக்கிறார். கஸ்தூரியின் இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement