எனக்குத் தன்னம்பிக்கை கொடுத்தவர் நீங்கள்தான் – சித்திக்கு இறப்பு குறித்து சூர்யா உருக்கம்.

0
1631
- Advertisement -

இயக்குனர் சித்திக் இழப்பு குறித்து நடிகர் சூர்யா பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக். இவர் ஆரம்ப காலத்தில் பிரபலமான இயக்குனராக இருந்த பாசில் என்பவருக்கு உதவி இயக்குனராக பணி புரிந்தார். அதன் பின்பு தான் இவர் இயக்குனர் ஆனார். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல், திரைக்கதை, எழுத்தாளர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த ராமோஜி ராவ் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் காட் பாதர், வியட் நாம் காலனி, ஹிட்லர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் இவர் தமிழிலும் சில படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளிவந்து ஹிட் கொடுத்த பிரண்ட்ஸ் என்ற படத்தை சித்திக் இயக்கி இருந்தார்.

- Advertisement -

சித்திக் திரைப்பயணம்:

அதனை அடுத்து பிரசன்னா நடிப்பில் வெளிவந்த சாதுமிரண்டா, விஜய்-அசின் நடிப்பில் வெளிவந்த காவலன், அரவிந்த்சுவாமி – அமலாபால் நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். அதற்குப் பின் இவர் தமிழில் படங்களை இயக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக அவஸ்தைப்பட்டு இருந்தார். இதனால் இவருக்கு தொடர்ந்து சிகிச்சையும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

சித்திக் மரணம்:

இவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தார்கள். இருந்தாலும், இயக்குனர் சித்திக் சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டார். இந்த தகவலை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், திரை உலகை சேர்ந்த பலரும் சித்திக் உடன் பணியாற்றிய நினைவுகளை பகிர்ந்தும் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரெண்ட்ஸ் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சூர்யாவும் உருக்கமான பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், “சித்திக் சாரின் மறைவு ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு.

-விளம்பரம்-

சூர்யா பதிவு:

அவரது நினைவுகள் என் இதயத்தைக் கனமாக்குகின்றன. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு என் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கேரியரில் ‘ப்ரண்ட்ஸ்’ ஒரு முக்கியமான படம். என் நடிப்பையும், என்னையும் புரிந்துகொண்டு என் மீது அளவற்ற அன்புடன் சின்ன சின்ன விஷயங்களைக் கூடக் கவனத்து அதை மேம்படுத்த வேண்டும் என்று நினைப்பார். சீரியஸாக இல்லாமல் நகைச்சுவையுடன் நான் முதல் முறையாக மிகவும் சிரித்து மகிழ்ந்தது அவரது படப்பிடிப்பின்போது தான். அப்போதே அவர் மதிக்கத்தக்க முன்னணி இயக்குநராக இருந்தார். இருப்பினும், அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் எல்லோரிடமும் சமமாக நட்பாகப் பழகுவார்.

சித்திக் இழப்பு குறித்து சொன்னது:

படப்பிடிப்பில் அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவருடன் பணியாற்றிய அந்தத் தருணங்கள் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத தருணங்கள். என் திறமையையும், என் தன்னம்பிக்கையையும் உணரச் செய்தவர் அவரே. அவரை நான் எப்போது சந்தித்தாலும் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் கேட்பார். குறிப்பாக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா என்பதைப் பற்றியும் விசாரிப்பார். நான் ஒரு நடிகராக வளர்ந்து வந்தபோது என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. உங்களைப் பிரிந்து வாழும் உங்கள் குடும்பத்தினருக்கு அமைதியும், நிம்மதியும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். என்றென்றும் உங்களின் நினைவுகளுடன் பயணிப்போம். மிஸ் யூ லாட் சார்!” என்று கூறி இருக்கிறார்.

Advertisement