இவ்ளோ சீக்கிரம் போய்ட்டியே – இளம் வயதில் காலமான தனது அண்ணன் குறித்து பிக் பாஸ் நடிகை உருக்கம்.

0
961
nikki
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

கொரோனா இரண்டாம் அலைக்கு இடையில் பல்வேறு நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா நோய் பாதிக்கப்பட்ட பலர் ‘ரெம்டெசிவிர் ‘ மருந்திற்காக பல மணி நேரம் காத்துகொண்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் பிரபலமும் காஞ்சனா 3 நடிகையின் அண்ணன் கொரோனாவால் காலமாகி இருக்கிறார்.

இதையும் பாருங்க : மறைந்த தன் தந்தை போட்டோ முன் விளையாடும் சிரஞ்சீவியின் குழந்தை – உருக்கமான வீடியோ.

- Advertisement -

வட இந்திய பெண்ணான நிக்கி தம்போலி தெலுங்கில் இதுவரை இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் காஞ்சனா 3 படத்தில் மட்டும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தையும் பிடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் அதில் இருந்து குணமானார்.

இப்படி ஒரு நிலையில் 29 வயதான இவரதுஅண்ணன், ஜட்டின் தம்போலி கொரோனா தொற்றால் இருந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் மிகவும் சோகத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், கடவுள் உன் பெயரை சொல்லப் போகிறார் என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. உன் மீது அதிக அன்பு வைத்திருந்தோம், இனியும் அப்படித் தான். உன்னை இழந்தது எங்கள் இதயங்களை நொறுங்க வைத்துவிட்டது. நீ தனியாக செல்லவில்லை. எங்களின் ஒரு பகுதியையும் எடுத்துச் சென்றுவிட்டாயே என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement