காதலித்தது முதல் திருமணம் வரை – அழகிய புகைப்படைகளை பதிவிட்டு அனிதா சம்பத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவரின் கணவர்.

0
2166
Anitha
- Advertisement -

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இதன் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா. அதன் பின்னர் இவர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும், இவர் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் சம்பத் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருந்தார்.இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். மேலும், இவர் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது.

- Advertisement -

இதிலும் இவர் நீண்ட நாட்கள் நீடிக்க முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. மேலும், இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட இவர் தங்களின் புது வீட்டின் கிரகப்பிரவேசம் செய்து இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

மேலும், அனிதா சம்பத் கணவரும் அனிதாவின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அனிதா சம்பத் பிக் பாஸில் இருந்தே போது வெளியில் அவருக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எல்லாம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார். இந்த நிலையில் பிறந்தநாள் கொண்டாடும் அனிதா சம்பத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘ என் கண்ணுகுட்டி, என் முயலு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

-விளம்பரம்-

ரொம்ப ரொம்ப தனித்திறமை கொண்ட பொண்னு. நியபாக சக்தி மிகவும் ஜாஸ்தி. பயங்கர சக்தி இருக்கும்.எதையும் ரொம்ப எளிதாக கத்துக்கக்கூடிய ஆள். இந்த இடத்துக்கு இந்த நிலைமைக்கு வந்ததுக்கு அவளோட முழு உழைப்பு மட்டும் தான் காரணம். கடினமான உழைப்பாளி 24hrs ல 20hrs ஒர்க் பண்ண சொன்ன கூட பண்ண கூடிய ஆள். காசு விஷயத்துல ரொம்ப சிக்கனம் அவுளுக்காக 1 ரூபாய் செலவு பண்ணனும்னா கூட ரொம்ப யோசிப்பா.

மத்தவங்களுக்காக எப்ப வேணா எவ்ளோ வேணா செலவு பண்ணுவா. கிடைக்கிற சின்ன சின்ன வாய்ப்பு கூட விடக்கூடாதுனு ரொம்ப உழைப்பா. பாத்த முதல் நாள்ல இருந்து இப்ப வரைக்கும் என்ன ஈர்த்து கொண்டே தா இருக்கா.இப்படி அவளை பத்தி பேச சொன்ன பேசிட்டு போலாம். அவுளோ புடிக்கும் அந்த பன்னிகுட்டிய. இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பட்டு. இந்த வருடம் ரொம்ப சிறப்ப அமையும். நீ ஆசை பட்டதெல்லாம் நடக்கும். மனமார்ந்த வாழ்த்துக்கள் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement