அப்பா உடல் பக்கத்துல ஒக்காந்துட்டு இருக்கும் போது நீ சாவலையான்னு கேட்டானுங்க, ஒரு வருஷம் தூக்க மாத்திரை எல்லாம் போட்டு – அனிதா சம்பத்தின் கண்ணீர் பேட்டி.

0
209
- Advertisement -

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக இருப்பவர் அனிதா சம்பத். இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா. அதன் பின்னர் இவர் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

அதன் பின் அனிதா சம்பத் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை பெற்றார். இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. தற்போது அனிதா நிறைய விளம்பரம், படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

- Advertisement -

அனிதா குறித்த தகவல்:

மேலும், இவர் தனியாகயூடுயூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட இவர் தங்களின் புது வீட்டின் கிரகப்பிரவேசம் செய்து இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இவர் பிக் பாஸில் இருந்த போதே இவரது தந்தை இறந்துவிட்டார். இதனால் மனம் நொறுங்கி போனார் அனிதா சம்பத்.

பிக் பாஸுக்கு பின் :

பிக் பாஸில் இவருக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ்கள் உருவாக்கினர். இதனால் இவர் சமூக வலைதளத்தில் என்ன பதிவிட்டாலும் இவரை திட்டி தீர்த்து தொடர்ந்து கமெண்டுகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனிதா சம்பத், சமூக வலைத்தளத்தில் சந்திக்கும் வெறுப்புகள் குறித்து கண்ணீருடன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ‘பிக் பாஸுக்கு பின்னர் நான் என் நிம்மதியே இழந்துவிட்டேன்.

-விளம்பரம்-

அனிதா சம்பத் அளித்த பேட்டி :

சொல்லப்போனால் என் அப்பா இறந்த பின்னர் நாங்கள் அனைவரும் ஒரு வருடம் தூக்க மாத்திரை போட்டுகொண்டு தான் தூங்கினோம். நான் தற்கொலை செய்ய கூட முயற்சி செய்து இருக்கிறேன். அந்த அளவிற்கு எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டு இருந்தது. என் அம்மா, நான் படிக்கும் போது தாலியை விற்றுத்தான் என்னை படிக்க வைத்தார். இப்போது நான் என் அம்மாவிற்கு எப்படி தாலி வாங்கி கொடுக்க முடியும். என் வாழ்க்கையில் சிரிப்பு என்பதே போய்விட்டது நான் உன் கூட வைத்துக் கொள்வது கிடையாது.

இது இல்லை என் வாழ்க்கை :

என் அப்பா இறந்த போது என் போனை எடுத்தாலே நீ எல்லாம் எப்படி இவ கூட வாழுற என்று கமெண்ட் வருகிறது. அதுவும் ஒரு சிலர் நீ என் அண்ணன திட்னல உங்க அப்பா போனது கரெக்ட் தான்னு கமன்ட் போட்றானுங்க. நீங்கள் எல்லாம் நினைப்பது போல என் வாழ்க்கை இல்லடா என் அப்பா போயிட்டாரு. நீ யாரை திட்டினாள் என்ன, நான் என்ன கொலை பன்னிட்டேனே, ரேப் பண்ணிட்டேனா’ என்று கண்ணீருடன் கூறி உள்ளார்.

Advertisement