விஜயின் லியோ பட த்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும் இடத்திற்கு உதயநிதி அனுமதி மறுத்திருக்கும் சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.
இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
லியோ படம்:
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா:
இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது அவருடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான். அதிலும் நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டிக்கதை ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? என்றுதான் சமீப காலமாகவே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
சவுக்கு சங்கர் பதிவு:
இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை என்ற சர்ச்சை தான் தற்போது எழுந்து வருகிறது. இது தொடர்பாக பிரபல விமர்சகர் சவுக்கு சங்கர் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், விஜயின் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கிடைக்கவில்லை.
லியோ தயாரிப்பு நிறுவனம் கொடுத்த விளக்கம்:
இதனால் சென்னை, செங்கல்பட்டு, வடக்கு ஆற்காடு, தெற்கு ஆற்காடு ஆகிய பகுதிகளின் விநியோக உரிமைகளை உதயநிதி நடத்திவரும் ரெட் சயின்ஸ் மூவி நிறுவனத்திற்கு தந்தால் மட்டுமே இசை வெளியீடு விழாவிற்கு அனுமதி அளிப்போம் என்று திமுக சொல்கிறது என்று ஒரு புதிய சர்ச்சை கிளப்பியிருக்கிறார். இதனால் சோசியல் மீடியாவில் பலவிதமான கமெண்ட்டுகள் வந்தது. இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் லியோ படத்தின் 7 ஸ்கிறீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் இசை வெளியீட்டு விழா தொடர்பாக வந்த செய்திகள் உண்மை இல்லை. அனைத்தும் பொய். கூடிய விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறி இருக்கிறார்கள்.