விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருந்த நிலையில் இறுதி வாரத்தில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.
மற்ற சீசன்களைவிட இந்த சீசனில் தான் எக்கசக்க விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதிலும் ஷிவானி, ஆஜீத் ஆகியோரை எல்லாம் பொத்தி பொத்தி காப்பற்றியது பிக் பாஸ். இதில் ரியோவை பற்றி சொல்லவா வேண்டும். அதிலும் கடந்த வாரம் பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் ரியோ கடைசி வார நாமினேஷனில் இருந்த போது அவரை இறுதி போட்டிக்கு அனுப்ப பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். பலரும் ரியோவிற்கு 50 வாக்குகளை அளித்த ஸ்க்ரீன் ஷாட்டை கூட தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இதையும் பாருங்க : பிக் பாஸில் இருந்து வெளியே வந்த கேபிக்கு கோலாகல வரவேற்பு – வீடியோ இதோ.
ஆனாலும், இறுதி வரை முதல் இரண்டு இடத்தை எந்த டிவி பிரபலத்தாலும் இந்த சீஸனில் பிடிக்க முடியவில்லை. இறுதியில் ரியோ மூன்றாம் இடத்தையும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் ஆரி முதல் இடத்தையும் பிடித்தார்.முதல் இடத்தை மட்டும் பிடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஆரி. பிக் பாஸ் 4 சீசனில் இறுதி வாரத்தில் மொத்தம் 31,27,72,000 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் முதல் இடம் பிடித்த ஆரிக்கு 16.5 கோடி வாக்குகளும். பாலாஜிக்கு 6.14 கோடி வாக்குகளும் கிடைத்திருந்தது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த பாலாஜியை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார் ஆரி.
ஆரி ஜெயித்த போது சனம் மற்றும் அனிதாவை தவிர வேறு யாரும் பெரிதா கொண்டாடவில்லை. அதிலும் அன்பு கேங்கில் இருப்பார்கள் முகத்தில் துளியும் சந்தோசம் தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் அறந்தாங்கி நிஷா 4 நாட்கள் கழித்து ஆரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர், நடிக்காத ஆரி ஜெயிச்சப்ப தான் உங்க மூஞ்ச பாத்தோமே என்று கமன்ட் செய்ய, அது போலி என்று கமன்ட் செய்துள்ளார்.