இதனால் தான் அண்ணி மகனை பிக் பாஸுக்கு என்னுடன் அனுப்பவில்லை – அசீமின் தம்பி சொன்ன உண்மை.

0
470
azeem
- Advertisement -

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறுக்க முடியாத போட்டியாளராக இருந்து வரும் அசீம் மகன் ஏன் பிரிஸ் டாஸ்கில் வரவில்லை என்று அசீம் தம்பி ஆதில் கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வைரலாகி சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா,adk ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் adk மற்றும் கதிரவன் வெளியேறி இருந்தார். இந்த சீசனில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் அசீம் கடந்த வாரம் நாமினேட் ஆகவில்லை. என்னதான் அவர் நாமினேஷனில் இல்லை என்றாலும் வாரம் வாரம் நடப்பது போல இந்த வாரமும் அவர் கமலால் வறுத்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

தொடர்ந்து எஸ்கேப்பாகும் அசீம் :

இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வருகிறார். என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தான் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை சந்திக்க வெளியில் இருந்து அவரவர் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

குடும்பங்களை சந்தித்த போட்டியாளர்கள் :

இந்த நிலையில் அசீமுடைய தம்பி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த நிலையில் அவர் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிற்கு போட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் அசீம் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிக நாட்கள் இருந்து விட்டு அவரின் மகனை பார்க்கவில்லை என்கிற போது அவருக்கும் எப்படி இருந்தது, அதே போல பிரீஸ் டாஸ்க்கின் போது மணிகண்டன், அமுதவாணன், மைனா குழந்தைகள் வரும் போது அசீமிற்கு எப்படி இருந்தது என்று, அசீமுடைய மகன் பிக் பாஸ் வீட்டிற்குள் வராததற்கு காரணம் என்ன? என்பது குறித்து கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

அசீம் மகன் வராத காரணம் :

அதற்கு பதிலளித்த அசீம் தம்பி கூறுகையில் அசீம்பிக் பாஸ் வீட்டில் உள்ள கேமெராவிடமும், கமலஹாசனிடமும் கூறியிருக்கிறார். தன்னுடைய மகன் மேலே உள்ள பாசத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது. எதிர்பார்த்தார் ஆனால் அவருடைய மகனை பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர முடியாத நிலைமை. ஆனால் அதனையும் அசீம் புரிந்து நிலைமைக்கு தகுந்தவாறு நடந்து கொண்டார். மேலும், ஆனால் இதற்கு அவரது முன்னாள் மனைவி காரணமா? என கேட்கப்பட்டது.

முன்னாள் மனைவி காரணமா? :

அதற்கு பதிலளித்த அசீம் தம்பி ஆதில் `அந்த மாதிரியான விஷயம் கிடையாது, உங்களுக்கே தெரியும் அவர் ஞாயற்று கிழமை மட்டும்தான் சந்திக்கும் சூழ்நிலையாக இருக்கிறது. நான் பிக் பாஸ் வீட்டிற்குள் புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் சந்தித்தேன், எனவே அந்த நேரத்தில் அசீம் மகனை அழைத்து வர முடியாது. அதோபோல அவருடைய மகனுக்கு சளி பிடித்திருந்தது எனவே வேண்டாம் என்று விட்டு விட்டோம். இருந்தாலும் நாங்கள் அவரது முன்னாள் மனைவியிடம் கேட்டிருந்தோம் அவர்களும் இந்த காரணத்தினால்தான் வேண்டாம் எனக் கூறினார்கள். இதுதான் அசீமுடைய மகன் பிக் பாஸ் வீட்டிற்குள் வராததர்க்கான காரணம் எனக் கூறினார் அசீம் தம்பி ஆதில்.

Advertisement