பிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’.! மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

0
895
Balaji

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று முன்றாவது கட்ட எலிமினேஷனை நெருங்கி விட்டது. இன்று (ஜூலை15) ஒளிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியில் நித்யா எலிமினேஷன் செய்யப்டுவார் என்று ஏற்கனவே சில நம்பகரமான தகவல்கள் வெளியாகின. அதே போல இன்று பாலாஜிக்கு அவரது மகள் போஷிகாவிக்கும் இடையே நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்துள்ளதாம்.

bigg-Boss-balaji

நடிகர் தாடி அவரது மகள் போசிகாவை பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். பாலாஜியும் பிக் பாஸ் வீட்டில் கூட ‘தனது மகள் போசிகாவை தான் நான் மிகவும் மிஸ் செய்கிறேன், ஆனால் நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த போது கூட என்னுடைய மகளை எனக்கு காண்பிக்கவில்லை என்று உருக்கமுடன் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி , அவருடைய மகள் போஷிகாவுடன் அகம் டிவி வழியே தொலைபேசியில் உறையடியுள்ளார்.

இன்று ஒளிபரப்பாக போகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நித்யா வெளியேட்டரப்ட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், போட்டியாளர்கள் எலிமினேட் ஆனா பின்னர் நடிகர் கமல் அவர்களுடன் பிக் பாஸ் மேடையில் உரையாற்றுவது வழக்கம். இன்றைய நிகழ்ச்சியில் நித்யா எலிமினேஷன் செய்யப்ட்ட பின்னர் அவரது மகள் போஷிகா பேசும் ஒரு வாய்ப்பை பெற்றுள்ளார் பாலாஜி.

nithya
பிக் பாஸ் வீட்டிலிருந்து தனது மகளுடன் தொலைபேசியில் உரையாடிய பாலாஜி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி அழுதுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது மகளுடன் பேசிய இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் போது அப்பா ,மகள் இருவருக்கும் இடையே சில உருக்கமான உரையாடல்களும் நடந்துள்ளது. இந்த பாசப்போர்ட்டத்தை கண்ட மற்ற போட்டியாளர்களும் நெகிழ்ச்சியில் கண் கலங்கினர். அந்த சம்பவத்தின் சில காட்சிகளை இன்று வெளியான ப்ரோமோ விடியோவிலும் கூட நீங்கள் பார்த்திருக்கலாம்.