இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனாவினால் 5,734 பேர் பாதிக்கப்பட்டும், 198 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதே போல கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மக்கள் போதும் முக கவசம், கிருமி நாசினி போன்றவற்றை பயன்படுத்தி வருவதால் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், முக கவசங்கள் இல்லாமல் வெளியில் வர கூடாது என்று சுகாதார துறையும் அறிவுறுத்தியுள்ளதால் இதன் தட்டுப்பாடும் அதிகரித்து உள்ளது. எனவே, பல தன்னார்வு நிறுவனங்கள் முக கவசங்களை தயாரித்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : தன்னுடன் நடித்த இந்த நடிகரை தான் சுனைனா திருமணம் செய்துகொள்ள போகிறாரா?
இருப்பினும் முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினி போன்றவை அதிக விலைக்கு விற்கப்பட்டு தான் வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகரும் பிக் பாஸ் புகழ் போட்டியாளருமான தாடி பாலாஜியின் செல்ல மகள் போஷிகா, வீட்டில் இருக்கும் பொருளை வைத்து எப்படி முக கவசத்தை தயாரிப்பது என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடீயோவை பாலாஜியின் மனைவியான நித்யா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மீடியாக்களில் சிக்கி சின்னா பின்னம் அடையும் பிரபலம் என்று பார்த்தால் அது நம்ம தாடி பாலாஜி தான். பாலாஜி அவர்கள் முதல்ல மனைவியுடன் பிரச்சனை பத்தி சொல்லி இருந்தாங்க. இப்ப வேற ஒரு பெண்ணுடன் தொடர்பு பத்தி எழுதிட்டு வர்றாங்க. ஆகமொத்தம் மீடியாவுக்கும் தாடி பாலாஜிக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்குன்னு சொல்லலாம். தாடி பாலாஜி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டாங்க. சின்னத்திரை, வெள்ளித்திரை என எல்லாத் துறையிலும் போய் இப்ப மீடியா துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இதையும் பாருங்க : புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருனு தெரியுதா? பாத்தா நம்ப மாடீங்க.
சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் தாடி பாலாஜி. சினிமாவில் வாய்ப்பு குறையவே தொலைக்காட்சி பக்கம் திரும்பிவிட்டார். மேலும், கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். அதே போல தாடி பாலாஜியும் தனது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.