ஷிவானியை அப்படி சொன்ன அடுத்த கனம், அர்ச்சனா வைத்த விபூதியை அழித்த பாலா – இத நோட் பண்ணீங்களா ?

0
16217
bala
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் மிகவும் சுவாரசியமான போட்டியாளர்கள் என்றால் ஒரு சிலர் மட்டுமே சொல்ல முடியும். அந்த வகையில் பாலாஜியும் ஒருவர். இந்த சீசனில் பாலாஜி, ஆரி, சனம்ஷெட்டி போன்றவர்கள் இல்லை என்றால் பிக்பாஸ் வீடு ஏதோ ஆனந்தம் படத்தில் வரும் குடும்பம் போல தான் இருந்திருக்கும். அதிலும் பாலாஜி வாரத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயத்தை செய்து மிகவும் பரபரப்பான ஒரு போட்டியாளராக மாறிவிடுகிறார் அந்தவகையில் நேற்று ஒரு விஷயத்தை செய்தார் பாலாஜி.

-விளம்பரம்-

நேற்று நடைபெற்ற டாஸ்கின் போது பாலாஜி அனைவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்போது ஓரமாக சென்று அமர்ந்த அர்ச்சனா மற்றும் நிஷா பேசிக்கொண்டிருக்கையில் அர்ச்சனா இங்கே யாருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கிடையாது அதிலும் பாலாஜி எதுக்கெடுத்தாலும் சண்டைதான் அம்மாடி அம்மா என்று கூறியிருந்தார். இந்த டாஸ் மிகவும் பரபரப்பாக முடிந்தது இந்த நிலையில் இந்த டாஸ்க் முடிந்த பின்னர் பாலாஜியிடம் பேசிய அர்ச்சனா ஏன் உனக்கு இவ்வளவு கோபம் வருகிறது உன்னுடைய நிதானத்தை இழக்காதே என்று கூறி இருந்தார்.

- Advertisement -

இதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னர் பாலாஜி குறித்து வேறு விதமாக பேசிய அர்ச்சனா பாலாஜியிடம் மிகவும் பாசத்தை பொழிந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவர் நெற்றியில் விபூதியை வைத்தார். அவர் வெற்றியை வைக்கும்போது பாலாஜி ஷிவானி தோளில் கைபோட்டு நின்றுகொண்டிருந்தார். அதன்பின்னர் அர்ச்சனா பாலாஜியை கட்டித்தழுவி பிறந்தநாள் வாழ்த்து கூறிய போது ஷிவானியை கொஞ்சம் தள்ளி நில்லேன் எருமை என்று சொன்னார். அவர் சொன்ன அடுத்த கணமே பாலாஜி தனது நெற்றியில் அர்ச்சனா வைத்த விபூதியை அழித்தார் பாலாஜி.

பாலாஜி மற்றும் அர்ச்சனாவிற்கு ஏற்கனவே இரண்டு மூன்று முறை சண்டை வந்திருக்கிறது. அப்படி சண்டை வந்த போதெல்லாம் நீ எனக்கு ஒரு புள்ளடா என்று அம்மா சென்டிமென்ட் வீசி பாலாஜியை ஆப் செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட கால் சென்டர் டாஸ்க்கிற்கு பிறகு அர்ச்சனா மற்றும் பாலாஜிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடுப்பான அர்ச்சனா, இனிமேல் என்னை அக்கா என்று அழைக்காதே இனிமேல் என்னை அர்ச்சனா என்று கூப்பிடு என்று சொன்னார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் பாலா மீது அக்கறை காட்டி வருகிறார் அர்ச்சனா. இப்படி அர்ச்சனா மாறி மாறி செய்து வருவதால் தான் பாலாஜிக்கு அர்ச்சனா மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ என்னவோ.

-விளம்பரம்-
Advertisement