இந்தியாவை அப்படிதான் அழைக்க வேண்டும் – பிக் பாஸ் பரணி சொன்ன காரணம்.

0
841
Bharani
- Advertisement -

இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் வைப்பது குறித்து நடிகர் பரணி கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் இந்தியா- பாரத் பெயர் குறித்த சர்ச்சை தான் பயங்கரமாக வைரலாகி வருகிறது. இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகிய இருவரும் கலந்து கொள்ளும் ஜி20 மாநாடு நிகழ்ச்சியில் அழைப்பிதழில் பாரத் என அச்சிடப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதற்கு எதிர்கட்சிகள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்தியா என்பது பாரத் என்று மாற்றப்பட்டால் உலக அளவில் பெரிய அளவில் விளைவுகள் ஏற்படும் என்றும் விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதற்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்தியா- பாரத் பெயர் குறித்த சர்ச்சைக்கு பிரபலங்கள் கூட தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் பரணி கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு பகுதியில் இருக்கும் கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு நடிகர் பரணி அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய சென்று இருக்கிறார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அவர், பாரத நாட்டிற்குள் தான் இந்தியா இருக்கிறது.

பாரத் பெயர் குறித்து சொன்னது:

பிரதமரை கூட பாரத பிரதமர் என்று தானே அழைக்கிறோம். பாரத நாடு தான் இது. அதனால் இந்தியாவை பாரத் என்று அழைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. பாரத் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும். மேலும், சமுத்திரக்கனி தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சசிகுமார் தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறார். இவர்களுடைய கூட்டணியில் விரைவில் நான் நடிப்பேன். நான் கடைசியாக அநீதி படத்தில் நடித்திருந்தேன்.

-விளம்பரம்-

பரணி நடிக்கும் படங்கள்:

தற்போது தணல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அது போக வெப் சீரிஸிலும் நடிக்கிறேன். கடவுள் அருளால் தொடர்ந்து நான் படங்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பரணி. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கல்லூரி படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது நாடோடிகள் படம் தான்.

பரணி நடித்த படங்கள்:

இதனை தொடர்ந்து பரணி அவர்கள் பல படங்களில் நடித்திருக்கிறார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பரணிக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வந்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் அநீதி. இந்த படத்தை வசந்த் பாலன் இயக்கியிருந்தார். கிரைம் தில்லர் பாணியில் இந்த படம் வெளியானது. இதனை அடுத்து இவர் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement