மீண்டும் ஒரு ஜாதிப்படமா ? எப்படி இருக்கிறது சேரனின் ‘தமிழ்க்குடிமகன்’ ? முழு விமர்சனம் இதோ.

0
3440
Cheran
- Advertisement -

இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தமிழ் குடிமகன். இந்த படத்தை லட்சுமி கிரியேஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் சேரன், ஸ்ரீ பிரியங்கா,லால் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

ஜாதி வேறுபாடுகளை மையமாகக் கொண்ட கதை. படத்தில் கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்யும் குலத்தில் சேரன் பிறந்திருக்கிறார். இவர் நல்ல டிகிரி படித்து முடித்து இருக்கிறார். இதனால் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், குல தொழிலை விடாமல் செய்கிறார். இவருடைய தங்கை டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

மேலும், அவருக்கும் மேல் ஜாதி சேர்ந்த ஊரின் பெரிய குடும்பத்தை சேர்ந்த லால் மகனுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இவர்களுடைய காதல் லாலுக்கு தெரிய வருகிறது. பின் லால் மற்றும் அவருடைய உறவினர்கள் சேரனின் தங்கையை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். அப்போது சேரனின் தங்கையை வெறியோடு தாக்குகிறார்கள். ஆனால், எதுவும் செய்ய முடியாமல் சேரன் தவிக்கிறார். இதற்கு பின் லாலுடைய அப்பா இறந்து விடுகிறார்.

ஆனால், அவருக்கு இறுதி சடங்கு செய்ய மாட்டேன் என்று சேரன் சொல்கிறார்.படித்து முடித்து குலத் தொழிலை விட்டு வேறொரு வேலைக்கு செல்லும் மக்கள் மத்தியில் இவர் தன்னுடைய குலதொழிலை விடாமல் செய்கிறார். இவரை அடுத்து சேரனின் மனைவியாக ஸ்ரீ பிரியங்கா, தங்கச்சி தீபிக்ஷா என்ற பலரும் தங்கள் கொடுத்த வேலையை சரியாக செய்கிறார்கள். படத்தில் மேல் ஜாதியை சேர்ந்தவர்கள் கீழ் ஜாதி மக்களை நடத்தும் கொடுமைகள், அடக்கு முறையை இயக்குனர் தெளிவாக காண்பித்திருக்கிறார்.

-விளம்பரம்-

உணவுப்பூர்வமான கிராமத்துக் கதையை எதார்த்தமாக இயக்குனர் கொடுத்து இருக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவும் பின்னணி இசையும் பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், பாடல்கள் தான் சரி இல்லை. கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக இருக்கிறது. சமூகத்திற்கு அர்த்தமான கதையை இயக்குனர் கொடுக்க முயற்சிப்பதற்கு பாராட்டு. ஆனால், இதை கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

சேரனின் நடிப்பு சிறப்பு

சமூகத்திற்கு தேவையான கதை

ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது

கிளைமாக்ஸ் அருமை

குறை:

கதைக்களத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்

பாடல்கள் சரி இல்லை

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

காமெடி இருந்திருந்தால் நன்றாக இருக்கும்

மொத்தத்தில் தமிழ் குடிமகன்- இன்றைய தலைமுறைக்கு தேவை

Advertisement