Breaking News : தயாரிப்பாளரும் மஹாலக்ஷ்மியின் கணவருமான ரவீந்தர் கைது. பின்னணி என்ன ?

0
999
Ravindar
- Advertisement -

தயாரிப்பாளரும் மஹாலக்ஷ்மியின் கணவருமான ரவீந்தர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசனில் வனிதா குறித்த இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரை சிரியலில் மிக பிரபலமான நடிகையாக மகாலக்ஷ்மி திகழ்ந்து வருகிறார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் கேரியரை தொடங்கினார். பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து இருக்கிறார். அதன் பின் இவர் சீரியலில் நடிக்க தொடங்கினார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மஹாலக்ஷ்மி, தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தான் இவர்கள் இருவரும் தங்கள் முதல் திருமண நாளை கொண்டாடி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் பண மோசடி புகாரில் ரவீந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரவீந்தர் மீது அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் பண மோசடி புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ரவீந்தர் மீது பண மோசடி புகார் அளித்து இருந்தார். அதில் அவர், நான் சென்னை அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தபோது கிளப் ஹவுஸ் என்ற சமூகவலைதள செயலி மூலமாக தயாரிப்பாளர் ரவீந்தருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.கடந்த ஆண்டு மே மாதம் 8ம் தேதி நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் தரவேண்டும் எனக்கூறி சமூகவலைதள செயலி வழியாக தயாரிப்பாளர் ரவீந்தர் என்னிடம் 20 லட்ச ரூபாய் பணம் கேட்டார். என்னிடம் 15 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறினேன்.

-விளம்பரம்-

பின் நான் இரண்டு தவணையாக 10 லட்சம் மற்றும் 5 லட்சம் பணத்தை ரவீந்தரின் நிறுவனமான லிப்ரா ப்ரோடக்ஷன் வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர் அதை கடந்த ஆண்டு மே 25ஆம் தேதியே திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறினார். ஆனால், ரவீந்தர் சொன்னபடி பணத்தை திருப்பி தரவில்லை.ரவீந்தரிடம் பணம் கேட்டதற்கு தொடர்ந்து அலைக்கழித்ததார். ஒருகட்டத்தில் எனது மனைவியும் ரவீந்தரை தொடர்பு கொள்ள முற்பட்டார்.

அப்போது என் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டார். மேலும் அவர் அவதூறாக பேசினார் என்று கூறி ரவீந்திரன் பணம் கேட்டதற்கான ஆதாரம், அவர் பணம் கேட்டு பேசிய ஆடியோ போன்றவற்றை அமெரிக்காவிலிருந்து ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையருக்கு புகாராக கொடுத்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் விஜய் அளித்த புகாரின் பெயரில் ரவிந்தரை மத்திய குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement