‘கல்யாணி’ டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை பிந்து மாதவி. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் பிந்து மாதவியும் ஒருவர். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. இவர் தமிழில் பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தமிழை விட தெலுங்கில் தான் மார்க்கெட் அதிகம் என்று சொல்லலாம்.
இவர் தமிழில் வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,ஜாக்சன் துறை, பசங்க-2 போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு நடிகை பிந்து மாதவிக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் இவர் கமலஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வயல்காடு சுற்று மூலம் உள்ளே நுழைந்தார்.
இதையும் பாருங்க : கொரோனாவையும் பொருட்படுத்தாத விஜய் சேதுபதியின் செயலால் குவியும் பாராட்டு.
இதன் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று பார்த்தால் எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை. எப்போதும் நடிகை பிந்து மாதவி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சூட்டிங் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நடிகர்,நடிகைகள் எல்லாம் வீட்டில் தான் இருக்கிறார்கள். வீட்டில் இருப்பது போர் அடிக்காமல் இருப்பதற்கு தன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இந்த நிலையில் நடிகை பிந்து மாதவியிடம் ரசிகர் ஒருவர் உங்களுடைய சீக்ரெட் கிரஸ் குறித்து சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு நடிகை பிந்து மாதவி அவர்கள் கூறியிருப்பது, எனக்கு ஒரே ஒரு ரகசிய கிரஸ் இருந்தது. அதில் சில சிக்கல்கள் வந்து விட்டது. அதை கமிடெட் என கூற முடியாது. இப்போது நான் சிங்கிளா தான் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதையும் பாருங்க : வெளிநாட்டில் படிக்கும் விஜய் மகனா இது. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.
நடிகை பிந்து மாதவி நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த கழுகு படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை தந்தது. இந்த கழுகு படத்தின் வெற்றியை தொடர்ந்து கழுகு 2 சமீபத்தில் தான் வெளியானது. ஆனால், கழுகு 2 படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது தமிழில் மாயன் மற்றும் யாருக்கும் அஞ்சலே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.