கொரோனாவையும் பொருட்படுத்தாத விஜய் சேதுபதியின் செயலால் குவியும் பாராட்டு.

0
165726
Vijaysethupathi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வபோது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி அவர்கள் மீண்டும் தன்னுடைய மனித நேயத்தை காண்பித்து உள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் நெல்லை பாரதி அவர்கள் மரணம் அடைந்தார். நெல்லை பாரதி மறைவுக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். எழுத்தாளர், சினிமா பாடலாசிரியர், சிந்தனையாளர், பேச்சாளர், மூத்த பத்திரிக்கையாளர் என்று பல திறமைகளைக் கொண்டவர் நெல்லை பாரதி.

- Advertisement -

இவர் முதலில் மாணவ பத்திரிக்கையாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இயக்குநரும், நடிகருமான டி ராஜேந்தர் நடத்திய உஷா பத்திரிக்கையில் பணியாற்றினார். அதை தொடர்ந்து தனது முயற்சியால் பல முன்னணி இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார் நெல்லை பாரதி. மேலும், இவர் சினிமாவில் பல படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார்.

Image

இந்த நிலையில் நெல்லை பாரதி அவர்கள் சமீப காலமாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. பின் இவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். நெல்லை பாரதியின் மறைவுக்கு அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நேரில் சென்று நெல்லை பாரதிக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

-விளம்பரம்-
Image

பின் விஜய் சேதுபதி அவர்கள் நெல்லை பாரதி குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த பண உதவிகளையும் செய்து உள்ளார். நெல்லை பாரதி தனது கடைசி காலத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு உத்தரவு சமயத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் இந்த செயலை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். நெல்லை பாரதி மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து உள்ளனர்.

தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல், லாபம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதோடு இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.அதுமட்டும்மல்லாமல் தளபதியோடு மாஸ்டர் படத்தில் வில்லனாக அசத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி.

Advertisement