தமிழ் சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவானாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இன்று விஜய்யின் பிறந்தநாள். இதை ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை பதிவிட்டு கொண்டாடி வருக்கிறார்கள். பொதுவாகவே ஜூன் 22ஆம் தேதி அன்று தமிழ்நாடே கோலாகலமாக இருக்கும். ஆனால், இந்த வருடம் கொரோனா பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய் இருப்பதால் மக்களின் இயல்பு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விஜய் பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போனது. இருந்தாலும் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அவருடைய ரசிகர்கள் எப்போதோ ஆரம்பித்து விட்டார்கள்.
சில தினங்களுக்கு முன் கொரோனா பிரச்சினை இருப்பதால் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்கி விஜய் பிறந்தநாளை டிரெண்டிங் செய்து வருகிறார்கள். அதிலும் #HBDTHALPATHYVijay என்ற ஹேஷ்டேக்கை விஜய் பிறந்தநாளுக்காக இன்று அதிகமாக டுவீட்டுகளைப் பதிவிட வேண்டுமென பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த மே மாதம் 1ம் தேதி அஜித் பிறந்தநாள் வந்த போது #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக் மூலம் மட்டும் 90 லட்சம் டுவீட்டுகள் பதிவாகின. அதோடு வேறு சில ஹேஷ்டேக்குகளுடன் அஜித் பிறந்தநாளன்று மொத்தமாக 2 கோடி டுவீட்டுகள் பதிவாகின. இந்நிலையில் தளபதி விஜய் அந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் இன்று டுவிட்டர் தளத்தில் பல டுவீட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால், அவர்களுக்குப் போட்டியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகர் கவின் பிறந்தநாளும் இன்று வந்து சேர்ந்துள்ளது. #HBDTHALPATHYVijay என்ற ஹேஷ்டேக் மூலம் இன்று சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான டுவீட்டுகள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது. அதே சமயம் கவின் பிறந்தநாள் ஹேஷ்டேக்கான #HBDKavin மூலம் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட டுவீட்டுகள் பதிவாகி உள்ளன. விஜய் ரசிகர்களின் டுவீட்டுகளை விட கவின் ரசிகர்களின் டுவீட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.