தனது தாயின் இடுப்பில் குழந்தையாக இருக்கும் சேரன்.! அறிய புகைப்படம் இதோ.!

0
7636
Cheran

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு பிரபலங்கள் பங்கு பெற்றுள்ளார். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் என்றால் அது இயக்குனர் சேரன் தான். தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த சேரன் சமீபகாலமாக திரைத்துறையில் தோல்வியை சந்தித்து வந்தார்.

இதனால் ஒரு மாற்றத்திற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார் சேரன்.பிக்பாஸ் வீட்டிற்குள் சேரன் மற்ற போட்டியாளர்களால் மரியாதை குறைவாக நடத்தப்பட்டபோது தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு இயக்குநர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்திருந்தனர்.

இதையும் பாருங்க : விஷால் திருமணம் உண்மையில் நின்றதா ? விஷால் பிறந்தநாளன்று அவரது காதலி பதிவிட்ட புகைப்படம்.! 

- Advertisement -

மேலும், தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனர் இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தனது மரியாதையை குறைத்துக்கொண்டு வருகிறார் என்றும் பலரும் புலம்பி வந்தனர். சேரன் ஆரம்ப காலத்தில் கே எஸ் ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் சேரன், கே எஸ் ரவிகுமாருடன் இருக்கும் ஒரு அறிய புகைப்படம் ஒன்று வைரலானது. இந்த நிலையில் சேரன் தனது தாயின் எடுப்பில் குழந்தையாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement